பிரதமர் மோடியின் விமானத்தில் நீச்சல் குளமா.? காங்கிரஸ் முக்கிய தலைவர் வெளியிட்ட பரபரப்பு..!

0
Follow on Google News

மேற்குவங்கம் : பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்துக்களையும் தவறான தகவல்களையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பிவருகின்றன. பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர்களின் பாதுகாப்பு கருதி ஏர் இந்தியா ஒன் போயிங் ரக விமானம் வாங்கப்பட்டிருந்தது. அந்த இரு விமானங்களின் விலை 8000 கோடி என கூறப்படுகிறது. ஆனால் ராகுல் இதுகுறித்து கூறுகையில் ஒரு விமானத்தின் விலை 16000 கோடி என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ரபேல் ரக விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சுமத்தியிருந்தார். ஆனால் விசாரணையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுலின் உறவினர் மற்றும் நெருக்கமான நண்பர் ஒருவர் இடைத்தரகராக செயல்பட்டு பலகோடி சுருட்டியதாக பிரான்ஸ் விமான நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்பின்னர் ரபேல் பற்றி இதுவரை காங்கிரஸ் வாய்திறக்கவில்லை.

இந்நிலையில் மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடந்த இருதினங்களுக்கு முன்னர் மேற்குவங்கத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். அதில் பேசிய ஆதிர் ரஞ்சன் ” காங்கிரஸ் தலைவர் ராகுல் நேபாளத்தில் நடைபெற்ற தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவே காத்மாண்டு சென்றார். அங்கு நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டார்.

அதைப்பற்றியே கேள்வி கேட்கும் நீங்கள் உலகம் சுற்றும் மோடியின் விமானத்தில் நீச்சல்குளம் இருப்பதை பற்றி வாய்திறந்தீர்களா. அதன் மதிப்பு மட்டுமே 13000 கோடி. ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்லும்போதும் அந்த விமானத்தில் உள்ள விலையுயர்ந்த நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டே செல்கிறார். அதைப்பற்றி நீங்கள் ஏன் கேட்க மறுக்கிறீர்கள்” என ஆதிர் ரஞ்சன் குறிப்பிட்டார்.

இதையடுத்து பிஜேபி எம்பியான வினோத் சோன்கர் நேற்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும் ஆதிர் ரஞ்சனுக்கு எதிராக பிரிவிலேஜ் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். ஒம்பிர்லாவுக்கு வினோத் எழுதியுள்ள கடிதத்தில் ” பிரதமர் மோடி 13000 கோடி செலவில் நீச்சல்குளங்கள் கொண்ட இரண்டு விமானங்களை வாங்கியதாக காங்கிரஸ் தலைவர் ஆத்திர ரஞ்சன் ஆதாரமற்ற கூற்றுகளை கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போது நீச்சலடிப்பதாக கூறியுள்ளார். அவர் பிரதமருக்கு எதிராக அநாகரிகமான மற்றும் தகாத கருத்துக்களை கூறியுள்ளார். எனவே எனது நோட்டிஸை பரிசீலித்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அதில் வினோத் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்திய பிரதமருக்கும் குடியரசுத்தலைவருக்கும் வாங்கப்பட்டிருக்கும் அந்த போயிங் பி 777 ரக விமானம் அமெரிக்காவின் ஏர் போர்ஸ் ஒன்னிற்கு இணையானது என கூறப்பட்டாலும் பல சில தொழில்நுட்பங்கள் அமெரிக்காவின் ஏர்போர்ஸ் ஒன்னை விட குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பறக்கும் விமானத்தில் நீச்சல்குளம் என்பது ஒருகட்டுக்கதை என ஏர் இந்தியா ஒன் குறித்து போயிங் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன