அனைவருக்கும் வணக்கம், இன்று நம் ஆரோக்கிய சமையலில் நாம் பார்க்கப்போவது முள்ளங்கி சட்னி. முள்ளங்கி உடம்பில் இருக்கும் கழிவுகள் எல்லாம் வெளியேற்றி, உடலில் கொழுப்புத் தன்மையை குறைக்க உதவுகிறது. மேலும் இது ஒரு நீர் காய், இது வெயில் காலத்தில் உடம்புக்கு தேவையான நீர் தன்மையை நமக்கு கொடுக்கிறது. வாங்க நாம இப்ப முள்ளங்கி சட்னி செய்வது எப்படினு பார்ப்போம். நாம முள்ளங்கியை சாம்பாரில் தான் போட்டு சமைப்போம். சிலப்பேருக்கு இதனுடைய வாசனை பிடிக்காம இருக்கும். இந்த சட்னி செய்து கொடுங்கள். முள்ளங்கி சாறும் தெரியாத அளவுக்கு இருக்கும். இது ரொம்ப சத்தான சட்னி.
இதை செய்வதற்கு தேவையான பொருட்கள்:-
★பெரிய முள்ளங்கி-1
★சின்ன வெங்காயம்-20
★மிளகாய் வற்றல்-15
★பூண்டு
★புளி அல்லது தக்காளி ஏதாவது ஒன்று பயன்படுத்திக்கொள்ளலாம்.
★கருவேப்பிலை, கொத்தமல்லி-சிறிது
★தாளிப்பதற்கு கடுகு, சீரகம், உளுந்து, கறிவேப்பிலை
செய்முறை:- முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி, மிளகாய் வத்தலும், பூண்டும் போட வேண்டும். சின்ன வெங்காயத்தை போட வேண்டும். அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லியை போட்டு நல்லா வதக்க வேண்டும். இது கொஞ்சம் அரை வேக்காட்டில் வதங்கி வர்றப்ப சிறிதாக நறுக்கி வச்ச முள்ளங்கியை ரொம்ப நேரம் பச்சை வாடை போக வதக்குங்கள். கொஞ்சம் நல்லா வதங்கி வரும் சமயத்தில் தக்காளியை போடணும். தக்காளியை போட்டு அதையும் சேர்த்து வதக்கவும்.
இந்த வதக்கிய பொருட்கள் எல்லாம் கொஞ்சம் ஆறின பிறகு கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். அதுக்கப்புறம் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம், கருவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்து வைத்த சட்னியில் கலந்து விடுங்கள். உடம்புக்கு சத்து தரும் ஆரோக்கியமான மற்றும் சுவையான சட்னி, முள்ளங்கி சட்னி ரெடி. இது உடம்புக்கு ரொம்ப ஆரோக்கியமான உணவு, இந்தச் சட்னியை நீங்களும் உங்க வீட்டுல செஞ்சு பயன்பெறுங்கள். நன்றி ~சுகன்யா தேவி முத்துராமன் Suganya’s Yummy Kitchen, இந்த செய்முறையை வீடியோவில் காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.