சர்க்கரை நோய்க்கும், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகளுக்கும் ஏற்ற வாழைப்பூ வடை செய்வது எப்படி.?

0
Follow on Google News

அனைவருக்கும் வணக்கம், இன்று நம் ஆரோக்கிய சமையலில் நாம் பார்க்கப்போவது வாழைப்பூ வடை. சர்க்கரை நோய்க்கும், பெண்களக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகளுக்கும் வாழைப்பூ மிகவும் நல்லது. வாழைப்பூவில் உள்ள துவர்ப்புத்தன்மை நமது உடலுக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்:
★வாழைப்பூ-1 ★கடலைப்பருப்பு – முக்கால் பங்கு
★துவரம்பருப்பு – கால் பங்கு
★சின்ன வெங்காயம் – 20
★மிளகு ,சீரகம் – சிறிதளவு
★பூண்டு – 2

செய்முறை:- வாழைப்பூவை எடுத்து பூவின் நடு நரம்பை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். கடலைப்பருப்பு முக்கால் பங்கும் துவரம்பருப்பு கால் பங்கும் சேர்த்து ஊற வைத்து எடுத்து அத்துடன் மிளகு, பூண்டு, சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையுடன், நறுக்கி வைத்த சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கி வைத்த வாழைப்பூவையும் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்து, கையில் வடை போல் தட்டி கடாயில் எண்ணெய் காய்ந்தவுடன் போட்டு எடுத்தால் வாழைப்பூ வடை தயார் ஆகிவிடும்.
~திருமதி க. சுகன்யா தேவி,இந்த ரெசிப்பியை வீடியோவில் காண கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்.