கடந்து பத்து ஆண்டுகளாக கடும் போராட்டத்துக்கு பின் ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின், அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள துரைமுருகன், பொன்முடி, கே.என் நேரு மாற்றும் ஐ.பெரியசாமி போன்ற மூத்த திமுக அமைச்சர்கள் அமைதியாக இருக்க, சுமார் 25 வருடம் அமெரிக்கா, சிங்கப்பூர் என மேற்கத்திய வாழ்கை வாழ்ந்துவிட்டு, தனது தந்தை, மற்றும் தாத்தாவின் பெயரை பயன்படுத்தி 2016 தேர்தலில் போது அரசியலில் நுழைந்த PTR பழனிவேல் தியாகராஜன் ஆணவத்தில் ஆடுவதாக சமீபத்தில் அவர் பேசிய வீடியோக்களை பார்ப்பவர்கள் குற்றசாட்டு வைத்து வருகின்றனர்.
இம்முறை 2016ல் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று நிதி அமைச்சராக திமுக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள PTR பழனிவேல் தியாகராஜன், இவர் பங்குபெறும் ஒவ்வொரு பேட்டியிலும் இவர் வாழ்ந்த அமெரிக்க வாழ்கை, இவருடை தந்தை மற்றும் தாத்தா பற்றிய பேசுவது, இப்படி தற்பெருமை பேசுவதில் தமிழக அரசியலில் இவருக்கு ஈடு வேறு யாரும் கிடையாது. இவரின் ஆணவ பேச்சின் காரணமாக பல்வேறு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
முடி திருத்தும் நபர்களை அம்பட்டையன் என ஆணவத்துடன் தொலைக்காட்சி விவாதத்தில் பேசி திமுக தலைமையை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தினார், பின் இவர் வருத்தம் தெரிவித்த பின் அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது, சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் பேசும்போது தொலைக்காட்சி விவாதத்தில் தன்னை பத்து முறை அழைத்தால் ஒரு முறை தான் செல்வேன் காரணம் தொலைக்காட்சி விவாதத்தில் தகுதியே இல்லாதவர்கள் பலர் கலந்து கொள்வதாகவும் பாஜக சார்பில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வரும் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் போன்றவர்களுக்கு விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தகுதியே இல்லை என்பது போன்று ஆணவத்துடன் தெரிவித்தவர்.
விவாத நிகழ்ச்சியில் மக்களால் அங்கீகாரம் கொடுக்கப்பட்ட எம்பி, எம்எல்ஏ மற்றும் கவுன்சிலர் மட்டுமே பங்கு பெற வேண்டும், ஆனால் ஒரு எம்எல்ஏ கூட இல்லாத பாஜகவை விவாத நிகழ்ச்சிக்கு அழைப்பது தவறு என பேசியவர், திமுக செய்தி தொடர்பாளர்களில் பெருபாலானோர் இதுவரை மக்களால் அங்கீகாரம் பெறாதவர்கள் தான் அதிகம் கலந்து கொண்டு வருவது அவருக்கு தெரியாத என அவர் பேசிய விடீயோவை பார்த்தவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்து பத்து ஆண்டுகளாக திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் உழைப்பினால், மக்களின் மிகுந்த நம்பிக்கையினால் இன்று அரியணையில் அமர்ந்திருக்கும் திமுக அமைச்சரவையில் அனுபமிக்க மூத்த தலைவர்கள் பலர் இருக்கையில் முக்கியமான நிதி துறையை அவர்களுக்கு வழங்காமல் PTR தியாகராஜனுக்கு அளித்துள்ளார் முதல் அமைச்சர் முக ஸ்டாலின், அவருடைய நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் செயல்பட்டு தமிழகத்தின் பொருளாதாரத்தை தலைநிமிர செய்வாரா PTR தியாகராஜன் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.