கர்நாடகா : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்த இடமெல்லாம் பிஜேபி தனக்கான வெற்றியை பதிவுசெய்துள்ளது. அதனால் ராகுலை பிஜேபியின் பிஜேபியின் பிரச்சார பீரங்கி என்றே அழைக்கின்றனர். கடந்த சில மாதங்களாக காங்கிரசிலிருந்து இளம் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் ராஜினாமா செய்து பிஜேபியில் இணைந்து வருகின்றனர்.
சோனியா ராகுல் மற்றும் ப்ரியங்கா காந்தி ஆகியோரின் செயல்பாடுகள் உட்கட்சியினரிடையே பலத்த எதிர்ப்பை கிளப்பியுள்ளது. கூட்டணி விவகாரங்களில் கட்சியின் மாண்பை விட்டுக்கொடுப்பதாக மூத்த நிர்வாகிகள் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் தலைமைக்கு மிக நெருக்கமானவர் என அழைக்கப்படும் அதிதி சிங் அதிலிருந்து விலகி பிஜேபியில் இணைந்தார்.
இந்நிலையில் கர்நாடகா காங்கிரஸ் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சரும் தற்போதைய காங்கிரஸ் மாநில துணைத்தலைவருமான பிரமோத் மத்வராஜ் நேற்று காங்கிரசிலிருந்து விலகினார்.இதுகுறித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தில் ” கேபிசிசியின் துணைத்தலைவர் பதவியை ஏற்கவேண்டாம் எனவும் காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்தும் நான் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்.
உடுப்பி தொகுதியில் நடக்கும் பிரச்சினைகளை சரிசெய்ய பலமுறை கோரிக்கை எழுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அது எனக்கு மோசமான அனுபவத்தை தந்துள்ளது. இதனால் பெரும் திணறலுக்கு ஆளாகியுள்ளேன். இதுகுறித்த தகவலை உங்களுக்கும் மற்றவர்கள் கவனத்திற்கும் தெரியப்படுத்தியிருக்கிறேன்” என தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரமோத் ராஜினாமா செய்த கையோடு முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பிஜேபியில் இணைந்தார். பிரமோத் கடந்த ஆண்டு விஸ்வேச தீர்த்த ஸ்வாமிகளுக்கு அவரது மரணத்திற்கு பின் பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவித்த பிரதமர் மோடியை பாராட்டியிருந்தார். மேலும் மத்தியில் பிஜேபி வந்தபிறகுதான் விருதுகள் நிர்ணயிக்கும் போக்கு மாறியிருக்கிறது” என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.