மதுரையில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மீனாட்சியம்மன் கோவில், அழகர் கோவிலுக்கு அடுத்து முக்கிய தளமாக இருந்து வருகிறது ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் கோயில். இந்த கோயில் 200ஆண்டுகளுக்கு பழமையானது. இந்தக் கோயிலின் உப கடவுளாக விநாயகர், முருகப்பெருமான் உள்ளனர். மேலும் பாண்டி முனீஸ்வரருக்கு காவலாக ஆண்டிச்சாமியும், சமய கருப்பும் இருந்து வருகின்றனர். கோவில் வெற்றிக்கும் பாண்டி முனீஸ்வரருக்கு பல வரலாறுகள் சொல்லப்படுகிறது. இதில் தல வரலாறாக எல்லாரும் சொல்லப்பட்டு வருபது கரூரில் இருந்து வந்த தம்பதிகளும் கதைதான்.
200 ஆண்டுகளுக்கு முன்பு கரூரிலிருந்து வள்ளியம்மை பெரியசாமி என்ற தம்பதிகள் மதுரைக்கு குடிபெயர்ந்து வந்தனர். அவர்கள் மதுரை வந்து அடையும் போது இரவு நேரத்தை எட்டி விட்டதால், தற்போது பாண்டி முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ள இடத்தில் அன்று ஒரு மரத்தடியில் ஓய்வு எடுத்தனர். அப்போது வள்ளியம்மாள் கனவில் முனிவர் ஒருவர் தோன்றி நான் தான் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன். முந்திய பிறவியில் கண்ணகியின் கணவனான கோவலனுக்கு தவறான நீதியை வழங்கியதால், அந்த பாவத்தின் நிவர்த்தியை போக்க மறுபிறவி எடுத்து ஈஸ்வரனை நோக்கி 8அடி தவறு செய்ததாக கூறினார். என்னை மீட்டெடுத்து வழிபட்டு வந்தால் உங்கள் குடும்பத்தை நன்றாக வைத்து கொள்வதாக கூறி விட்டு மறைந்து விட்டார். அதிர்ந்துபோய் எழுந்த வள்ளியம்மாள் நடந்தது கனவு என்று உணரத் தொடங்கினார். பிறகு கணவரிடம் நடந்ததை கூறினார். சொன்ன இடத்தில் தோண்டி பார்த்தபோது அதிர்ந்து போய் விட்டனர். தவக்கோலத்தில் ஜடைஙளுடன் ஒரு சிலையை வெளியில் எடுத்து மரத்தடியில் வைத்து முதலில் வள்ளியம்மாள் குடும்பத்தினர் வழிபட்டு வந்தனர். முனீஸ்வரரின் சக்தியை உணரத் தொடங்கிய பிறகு ஏராளமான பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பிறகு பெரிய அளவு பிரதிஷ்டை செய்து தற்போது வழிபட்டு வருகின்றனர்.
நீண்ட ஜடைகளுடன் முனிவராக ஈஸ்வரன் தவம் செய்ததால் ஜடாமுனீஸ்வரர் என்று பெயரால் ஆரம்பத்தில் அழைக்கப்பட்டு வந்தார். பிறகு பாண்டிய மன்னர் குலத்தைச் சேர்ந்த மன்னன் என்பதால் பாண்டி முனீஸ்வரர் என்று தற்போது வரை பக்தர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.பாண்டி முனீஸ்வரருக்கு வள்ளியம்மாள் சமூகம் தலைமுறை தலை முறையாக பூசாரி களாக இருந்து பூஜைகள் செய்து வருகிறார்கள். இப்போது வள்ளியம்மாளின் நான்காவது தலைமுறை தான் பூசாரியாக உள்ளனர்.
தற்போது மதுரையில் பிரசித்தி பெற்ற தலமாக இருந்து வருகிறது. மதுரை மக்களால் காவல் தெய்வமாக வழங்கப்பட்டு வருகிறார்கள். பாண்டி முனீஸ்வரரிடம் கேட்ட வேண்டுதல் நிறைவேறினால் அவருக்கு மொட்டை அடிப்பதும், சுருட்டு, சாராயம் மற்றும் கிடாய் வெட்டுவார்கள். பாண்டி முனீஸ்வரர் புலால் உண்ணாத கடவுள். அதனால் இவருக்கு வேண்டுதலுக்கு கிடாய் வெட்டு போவதாகச் சொல்லுவார்கள் ஆனால் அந்தத் கிடாய் வெட்டுவது சமய கருப்புக்கே. இந்த சமய கருப்புதான் பாண்டி முனீஸ்வரருக்கு காவலாக இருந்து வருகிறார் மிகவும் உக்கிரமான வரும் கூட.
பாண்டி முனீஸ்வரர் கோவிலுக்கு வந்து மனமுருகி வேண்டி வந்தால் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பே இந்தக் காரியம் நிறைவேறி இருக்கும். குழந்தையில்லா தம்பதிகளுக்கு குழந்தை வரத்தை அள்ளிக் கொடுக்கும் முனீஸ்வரராக இருந்துவருகிறார். அவர் சன்னதிக்கு இ எதிர் புறத்தில் உள்ள மரத்தில் குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுவார்கள் அப்படி கட்டினால் குழந்தை பாக்கியம் நிறைவாக கிட்டும் என்பது இங்கு உள்ள ஐதீகம். பில்லி, சூனியம், பேய் பிடித்தவர்களை இந்தக் கோவிலுக்குள் அழைத்து வந்தாள் முனீஸ்வரர் நோக்கிய பார்வையில் அனைத்தும் சரியாகிவிடும். ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் கோவிலை குடும்பத்துடன் தரிசித்து வந்தால் உங்கள் குடும்பத்திற்கு காவலாக இருந்து பல நன்மைகளை செய்து வருவார்.