பாட்டி வைத்தியம் மூலம் தினமும் ஆரோக்கியமான தாய்ப்பால் சுரக்க டிப்ஸ்…

0
Follow on Google News

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவும் மற்றும் குழந்தைகளுக்கு சத்துக்களும் கிடைக்கிறது. அதனால் தான் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்கப்படுகிறது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த தாய்ப்பால் சில தாய்மார்களுக்கு வருவதில்லை. தாய்ப்பால் உற்பத்தி குறைவிற்கு கால்சியம் குறைபாடும் ஒரு காரணம். தாய்ப்பால் அதிகரிக்க தான் பாட்டி வைத்தியத்தை கடைப்பிடிப்போம்.

தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்க கடைபிடிக்க வேண்டிய பாட்டி வைத்தியம்: 1.பூண்டு: தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தினமும் சமையலில் பூண்டைச் அதிகமான அளவில் சேர்த்து வந்தாலே தாய்ப்பாலின் அளவு அதிகரிக்கும்.

  1. பெருஞ்சீரகம்: பெருஞ்சீரகத்தை தண்ணீர் மற்றும் தேநீரில் கலந்து குடித்து வந்தால் தாய்ப்பாலை அதிகரிக்கப் பெரிதும் உதவும்.

3.பால் சுறா: பால் சுறாவை கருவாடை தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சமைத்து கொடுத்தால் தாய் பால் சுரப்பது அதிகரிக்கும்.

  1. கீரை: முருங்கை கீரையை சுத்தம் செய்து சிறிதளவு பாசிப்பருப்பை அதனுடன் வேக வைத்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்.
  2. காய்: காய்யில் வைட்டமின்கள் நிறைந்த கேரட், பீட்ருட், கோ‌ஸ், போன்ற பச்சைக் காய்கறிகளில், தாதுக்கள் அதிகமாக இருக்கிறது. மேலும் பழங்கள், ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இந்த பாட்டி வைத்தியம் உணவுகளை அனைத்தையும் சரியாக செய்து வந்தால் தினமும் எந்த குறையும் இல்லாமல் தாய்ப்பால் ஊட்டச்சத்து டன் சுரக்கும்.