சர்ச்சைக்குரிய வினாத்தாள் … ஆசிரியர் அதிரடி இடை நீக்கம்..! என்ன கேள்வி தெரியுமா.?

0
Follow on Google News

புதுதில்லி : இந்தியாவில் மதசார்பின்மை எனும் போதனை ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே தொடர்ந்து போதிக்கப்பட்டு வருகிறது என ஒருசாரார் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மேலும் கருத்து சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை தங்களுக்கு மட்டுமே இருப்பது போல லிபரல்சுகளும் இடதுசாரிகளும் எல்லைமீறி நடந்துவருவதாகவும் ஒரு குறிப்பிட்ட பெரும்பான்மை மக்களிடையே பதட்டத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

இதற்க்கு எடுத்துக்காட்டாக சென்னை லயோலா கல்லூரியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹிந்து தெய்வங்களின் உருவப்படத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும் பாரத அன்னையை கீழ்த்தரமாக ஓவியம் வரைந்தும் இடதுசாரி சித்தாந்தம் கொண்டவர்கள் கல்லூரியிலேயே காட்சிப்படுத்தியிருந்தனர். அப்போதே இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

இந்நிலையில் கிரேட்டர் நொய்டாவை தலைமையகமாக கொண்ட சாரதா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு வினாத்தாளில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி இப்போது பரபரப்பை கூட்டியிருக்கிறது. அந்த வினாத்தாளில் பாசிசம்/நாசிசம் மற்றும் வலதுசாரி ஹிந்துத்வாவுக்குமிடையே உள்ள ஒற்றுமைகளை வாதங்களுடன் விரிவாக குறிப்பிடவும் என கேள்வியெழுப்பி அதற்க்கு ஏழு மதிப்பெண்கள் என குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து இந்த வினாத்தாள் சமூக வலைதளத்தில் வைரலானது. அதைத்தொடர்ந்து சில மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் பல்கலைக்கழக நிர்வாகம் உண்மைகண்டறிய மூன்றுபேர் கொண்ட குழுவை நியமித்தது. அதன் மேற்கட்ட விசாரணையில் வினாத்தாளை தயாரித்த ஆசிரியரிடம் விளக்க அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

மேலும் பல்கலைக்கழக மானிய குழு இந்த சம்பவம் தொடர்பாக ஒருவார காலத்திற்குள் பலக்லைக்கழகம் விளக்க அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த சிலநாட்களுக்கு முன்னர் மஹாராஷ்டிராவில் இதே போல ஒரு கேள்வி மாநில அரசுத்தேர்வில் கேட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் மத்தியில் குழப்பம் விளைவிக்க முயன்ற தொடர்புடைய ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

அதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ஆசிரியர் பெயர் பரூக் என்பதும் அவர் முன்னாள் JNU மாணவர் என்பதும் தெரியவந்தது. ஆசிரியர் பரூக் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.