ராஜஸ்தான் மாநிலத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார் கைலாஷ் போக்ரா.இவர் அந்தப் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் எந்த விசாரணையும் இதுவரை நடத்தவில்லை. இதனால் மனம் நொந்து போன அந்தப் பெண் அந்த அதிகாரியிடம் இந்த விசாரணை தொடங்கச் சொல்லி பலமுறையும் கேட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நான் உனக்கு சாதகமாக சாதிக்க வேண்டுமென்றால் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த பெண் ஊழல் பிரிவு டிஜிபியிடம் புகார் அளித்தார். உயர் அதிகாரிகளின் ஆலோசனை பெயரில் அந்தப் பெண் வீட்டிற்கு அழைத்த போலீஸ் அதிகாரியிடம் வீட்டிற்கு வருவதாக சம்மதம் தெரிவித்தார் அந்த பெண். உயர் அதிகாரிகள் ஆலோசனை பேரில் சரியாக நடைபெற்று வந்தது.
சொன்னதுபோல அந்த போலீஸ் அதிகாரியின் வீட்டுக்குள் நுழைந்து அந்தப் பெண், உடனடியாக கதவைச் சாத்தினார் கைலாஷ். அவரை சுற்றி வளைத்து பிடித்த ஊழல் தடுப்பு பிரிவு போலீசார். தப்பிக்க முயற்சித்த போலீசார் கைலாஷை தப்பிக்க முடியாமல் சுற்றிவளைத்த ஊழல் தடுப்பு பிரிவு போலீசார். ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரின் இந்த நடவடிக்கையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.