சமீபத்தில் ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான கட்டணத்தை உயர்த்தினர். இந்தியாவை பொறுத்தவரை ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் ஜியோ ஆகிய மூன்று நிறுவனங்கள்தான் பிரிபெய்டு சேவையில் முன்னணியில் உள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் ஏர்டெல் தன்னுடைய சேவைக்கட்டணத்தை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியது.
அதையடுத்த சில நாட்களில் வோடபோனும் 20 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியது. இந்நிலையில் இப்போது ஜியோவும் 20 சதவீத கட்டண உயர்வை அறிவித்துள்ளது. சொல்லி வைத்தார்போல மூன்று நிறுவனங்களும் கட்டண உயர்வை அடுத்தடுத்து உயர்த்தி உள்ளதால் வாடிக்கையாளர்கள் தலையில் சுமை விழுந்துள்ளது.
அதுவும் ஒரேயடியாக 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை என்பது மிகப்பெரிய விலையேற்றம் என்று மக்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.