இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில், தற்பொழுது இந்த திரைப்படம் சென்சார் போர்டில் சிக்கியுள்ளது. படத்தில் எந்தெந்த காட்சிகளை ம்யூட் செய்ய வேண்டும் எந்தெந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
இதில் நடிகர் விஜயின் பெயர் காந்தி என்பதால் இது தேசத்தந்தை காந்தியை இழிவு படுத்துவது போல் உள்ளது என்கின்ற ஒரு சர்ச்சை வெடித்தது. அதே நேரத்தில் நடிகர் விஜய் இந்த படத்தில் மது சிகரெட் அருந்துவது போன்ற காட்சிகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், தேசத்தந்தை காந்தியின் பெயரை வைத்துக் கொண்டு எப்படி மது சிகரெட் என அருந்தலாம் என்கின்ற ஒரு சர்ச்சையும் வெடித்துள்ளது.
இதே சர்ச்சை சென்சார் போடிலும் வெடித்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் காந்தி என்கின்ற பெயரை ம்யூட் செய்ய வேண்டும் என்றால் படம் முழுக்க பல இடங்களில் ம்யூட் சவுண்டு கேட்கும். அதனால் காந்தி என்ற பெயரை ம்யூட் செய்யவில்லை, மேலும் ஒரு தலைவரின் பெயரை எத்தனையோ பேர்கள் நிஜ வாழ்க்கையில் வைத்துள்ளார்கள், இது ஒரு இயல்பானது தான்.
மேலும் தலைவர் பெயரை வைத்துள்ளவர்கள் அந்த தலைவரை பின்பற்றி தான் நடக்கிறார்களா.? என்பது கிடையாது. இருந்தாலும் தேசத்தந்தை என்கின்றவார்த்தையை இந்த படத்தில் பயன்படுத்தக்கூடாது மீட் செய்ய வேண்டும் என்று சென்சார் போர்டு சொல்லியதால் அதை ம்யூட் செய்து உள்ளார்கள். அதே நேரத்தில் எந்தெந்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது என்கின்ற தகவலும் கசிந்துள்ளது.
அதில் ஒரு காட்சியில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்படும் காட்சியின் நீளம் அதிகமா இருக்கிறது. அதை குறைக்கும்படி சென்சார் போடு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதையும் படக்குழுவினர் செய்துள்ளனர். அதே நேரத்தில் அந்த படத்தில் ஒரு காட்சியில் பெண் நடிக்கும் ஒரு காட்சி மிக மோசமாக இருக்கிறது. அதனால் அந்த காட்சியை நீக்க வேண்டும் என்று சென்சார் போர்டு தெரிவிக்க, அந்த காட்சியும் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அது எந்த மாதிரியான காட்சி படுக்கையறை கட்சியா.? கொலை செய்யப்படும் கட்சியா.? என்கின்ற எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தில் சமீபகாலமாக சிகரெட் குடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்று வருவது மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. அதுவும் ஒரு அரசியல் கட்சியை தொடங்கிய பின்பு விஜய் இவ்வாறு செய்து வருவதாக விமர்சனம் இருந்து வரும் நிலையில்.
அந்த விமர்சனங்களை எல்லாம் மீறி கோட் படத்திலும் இந்த காட்சிக்கு முக்கியத்துவம் என்பதால் சிகரெட் மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வழியாகி உள்ளது. மேலும் கோட் படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்றுள்ள மது பாட்டிலில் அந்த மது பாட்டில் பிராண்டு தெரிகிறது, அந்த பிராண்டை எடுத்து விடுங்கள் என்று சென்சார் போர்டு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் மதம் சம்பந்தமாகவும் அரசியல் சம்பந்தமாக இடம்பெற்றுள்ள வசனங்களை மீட் செய்ய வேண்டும், மேலும் அதிக கெட்ட வார்த்தை இந்த படத்தில் பயன்படுத்தப்படுவதாக ஏற்கனவே தகவல் வழியாக நிலையில் தற்போது சென்சான்போர்டு அந்த கெட்ட வார்த்தை பயன்படுத்தும் இடங்களில் மீட் பண்ண சொல்லி வலியுறுத்தி உள்ளார்கள்.
அதே நேரத்தில் டைட்டில் கார்டு முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இருப்பதால் நீங்கள் ஆங்கிலத்தில் டைட்டில் போடுவது போல் தமிழிழும் போட வேண்டும் என்று சென்சார் போர்ட் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, அதையும் மாற்றியுள்ளது படகு குழுவினர். அந்த வகையில் சென்சார் போர்டு என்ன சொல்லுதோ அதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காமல் பட குழுவினர் செய்து முடித்துள்ளார்கள், காரணம் மிகப் பெரிய பட்ஜெட் என்பதால் எந்த ஒரு சிக்கலும் வந்து விடக்கூடாது என்று கச்சிதமா செய்து முடித்துள்ளார் வெங்கட் பிரபு.