தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நெப்போலியன் மகன் தனுசுக்கு மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்து சென்றபோது அங்கு அமெரிக்காவிலேயே தங்கிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்கின்ற ஒரு கட்டாயம் ஏற்பட்டது. அப்போது நடிகர் நெப்போலியன் மத்திய அமைச்சராக இருந்தார். இந்த நிலையில் தன்னுடைய மனைவி குழந்தைகள் இருவரையும் அமெரிக்காவில் புதியதாக வீடு வாங்கி அங்கே தங்க வைத்து விட்டு நடிகர் நெப்போலியன் இந்தியாவில் அமைச்சர் ஆக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
மாதம் ஒரு முறை தன்னுடைய குடும்பத்தை சென்று பார்த்து வந்து கொண்டிருந்தார் நடிகர் நெப்போலியன். இப்படி ஒவ்வொரு முறையும் நெப்போலியன் மத்திய அமைச்சர் என்பதால் நினைத்த உடனே அமெரிக்கா செல்ல முடியாது. பிரதமர் அலுவலகத்தில் கடிதம் எழுதி கொடுத்து அனுமதி பெற்று தான் செல்ல முடியும். அப்படி ஒரு சூழலில் தன்னுடைய மகனை தன்னுடைய குடும்பத்தை ஒவ்வொரு மாதமும் சென்று பார்த்து வந்துள்ளார் நெப்போலியன்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் ஜீவன் டெக்னாலஜி சாப்ட்வேர் நிறுவனத்தை தொடங்கி மிகப்பெரிய நஷ்டத்தையும் சந்தித்தார் நெப்போலியன். இருந்தும் அவையெல்லாம் கடந்து அந்த தொழிலில் வெற்றியும் அடைந்தார் நெப்போலியன். இப்படி அரசியலில் அதிக ஈடுபாடு கொண்ட நடிகர் நெப்போலியன் ஒரு கட்டத்தில் நமது குடும்பம் ரொம்ப முக்கியம், இதுவரை சினிமா அரசியல் என இரண்டு களத்திலே பயணிச்சிட்டோம், ஆனால் குடும்பத்திற்காக பெருசா எதுவும் செய்யவில்லை.
பணம் மட்டும் இருந்தால் போதுமா.? என்கின்ற ஒரு மனநிலைக்கு வந்த நெப்போலியன், இனி குடும்பத்துடனே இருக்க வேண்டும் என்பதற்காக அடுத்த நடந்த 2014 தேர்தலில் போட்டியிடவே விரும்பவில்லை. நெப்போலியன் நிரந்தரமா சென்று அமெரிக்காவிலே செட்டிலானார். இருந்தாலும் மிகப் பெரிய ஒரு கட்சியில் மிக முக்கிய நபராக பயணித்த நெப்போலியன் , மேலும் மத்திய அமைச்சராக இருந்தவருக்கு அரசியல் ஆசை அவ்வப்போது வந்து சென்று உள்ளது.
இதனை தொடர்ந்து அமெரிக்காவில் செட்டில் ஆன பின்பு அரசியலில் மீண்டும் என்ட்ரி கொடுக்கலாம் என்று தமிழகம் வந்தார் நடிகர் நெப்போலியன். இந்த காலகட்டத்தில் அவருடைய இரண்டு மகன்களும் இனி அப்பா அரசியலுக்கு சென்றால் நாங்கள் பேசவே மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக மூத்த மகன் தனுஷ் அப்பா மீண்டும் அரசியலுக்கு சென்றால் நாம் குடும்பத்துடன் அமெரிக்காவில் இருக்க வேண்டும் , அப்பா மட்டும் இந்தியாவில் இருக்க வேண்டும்.
மாதம் ஒருமுறை வந்து பார்த்துவிட்டு செல்வார், அதனால் அப்பா அரசியலை முற்றிலும் துறந்து விட்டு குடும்பத்தோடு இங்கு அமெரிக்காவில் நம்முடன் இருக்க வேண்டும். அப்படி அரசியலில் அவருக்கு ஈடுபாடு இருந்தால் நான் அப்பாவுடன் பேசவே மாட்டேன் என்று மூத்த மகன் தனுஷ் மிக பிடிவாதமாக தன்னுடைய அம்மாவிடம் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து நெப்போலியன் மனைவி முன்னிலையில் அமெரிக்கா வீட்டில் மகன் மற்றும் தந்தை இவர்களுக்கு இடையிலான பஞ்சாயத்து நடந்துள்ளது.
அப்போது மகனின் ஆசையை நிறைவேற்ற நிரந்தரமாக அமெரிக்காவில் செட்டில் ஆகிறேன் என்று முற்றிலும் தன்னுடைய அரசியல் ஆசையை துறந்து விட்டார் நெப்போலியன். அந்த அளவுக்கு நடிகர் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் மிகப் பிடிவாதமாக இருந்ததால் தான் அவருடைய தந்தை தன்னுடைய அரசியல் ஆசையை துறந்ததாக கூறப்படுகிறது.
இப்படி மகனுக்காக தன்னுடைய ஆசைகள் எல்லாம் துறந்து தற்பொழுது ஒரு தந்தையாக தன்னுடைய மகனுக்கு திருமணத்தை நடத்தி வைத்துள்ளார் நெப்போலியன். அந்த வகையில் தனுஷிற்கு செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் தந்தையாக செய்து முடித்து விட்ட நெப்போலியன் பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்