மாமா.. ரஜினியை கட்டி பிடித்து கதறி அழுத தனுஷ்… போயஸ் கார்டனில் நடந்த மகள் பஞ்சாயத்து..

0
Follow on Google News

கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் அவருடைய மனைவி ஐஸ்வர்யா இருவரும் ஹைதராபாத்தில் ஒரே ஓட்டலில் தங்கி இருந்த நிலையில், இருவரும் அங்கிருந்து தனித்தனியாக தாங்கள் இருவரும் ஒருமனதாக பிரிவதாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இத்துடன் எங்களுடைய 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக ஒரு என அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் அவருடைய மனைவி ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து இருந்தாலும் கூட அவர்கள் குழந்தைகள் தாய் – தந்தை இருவரிடமே மாறி மாறி வளர்ந்து வருகிறார்கள். அதே நேரத்தில் தங்களுடைய குழந்தைகளின் பள்ளி நிகழ்ச்சிக்கு ஒரு குழந்தையின் தாய் தந்தையாக தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக கலந்து கொண்டாலும் இருவரும் பேசிக் கொள்வதில்லை என தகவல் வெளியானது.

இந்த நிலையில் தனுஷ் போயஸ் கார்டனில் மிக பிரம்மாண்டமான பங்களா கட்டியுள்ள நிலையில் அந்த வீட்டின் கிரக பிரசவத்திற்கு பிரவேசத்திற்கு ஐஸ்வர்யா உட்பட ரஜினி குடும்பத்தினர் யாருமே கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் தொடர்ந்து தனுஷ் – ஐஸ்வர்யா இருவரையும் இணைத்து வைப்பதற்காக நடந்த பேச்சுவார்த்தைகள் தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மனைவி லதா ரஜினிகாந்தை அழைத்து மகள் ஐஸ்வர்யாவும் மருமகன் தனுஷும் மீண்டும் இணைய வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை, அதற்காக வேலையை நீ தான் செய்ய வேண்டும் என்று மருத்துவமனையில் இருந்த ரஜினிகாந்த் தன்னுடைய மனைவி லதாவிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவிடம் லதா ரஜினிகாந்த் சண்டை இட்டு இருக்கிறார். உன்னுடைய ஈகோவை விட்டுவிடு நீங்கள் கணவன் மனைவியாக கூட வாழ விரும்பவில்லை என்றாலும் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல அப்பா அம்மாவாக இருங்க, அப்பா ரஜினிகாந்த் நீங்க இருவரும் இணைய வேண்டும் என்று உடல்நிலை சரியில்லாத இந்த நேரத்தில் ஆசைப்படுகிறார். அதனால் நீ நிச்சயம் உன்னுடைய கணவருடன் மீண்டும் இணைய வேண்டும் என்று ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து போயஸ் கார்டனில் தனுஷ் தங்கி இருக்கும் பங்களாவிற்கு சென்ற ஐஸ்வர்யா அங்கே இருவரும் மனம் விட்டு நீண்ட நேரம் பேசி இருக்கிறார்கள். இதன் பின்பு சமீபத்தில் நடந்த தீபாவளி பண்டிகையின் போது தன்னுடைய வீட்டிற்கு வர மருமகன் தனுஷ்க்கு அழைப்பு விடுத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இதனைத் தொடர்ந்து ரஜினி வீட்டிற்கு தீபாவளி அன்று சென்ற தனுஷிடம் பல விஷயங்கள் மகள் வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார் ரஜினிகாந்த்.

அப்போது தனுஷ் நான் உங்களை மாமனாராக பார்க்கவில்லை என்னுடைய வழிகாட்டியாக தான் இதுவரை பார்க்கிறேன். உங்களை சார் என்று தான் இதுவரை அழைக்கிறேன், மாமா என்று கூட அழைக்கவில்லை காரணம், என்னுடைய வழிகாட்டி நீங்கள். என் மீது எந்த தவறும் இல்லை என்று ஒரு கட்டத்தில் ரஜினி காலில் விழுந்து என்னை மன்னித்து விடுங்கள் என்று கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார் நடிகர் தனுஷ்.

இதனைத் தொடர்ந்து மகள் ஐஸ்வர்யாவை அழைத்த ரஜினிகாந்த், இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கு விவாகரத்து முடிந்து மீண்டும் திருமணம் நடந்து அவர்களுக்கு குழந்தை என்று அவர்களுடைய வாழ்க்கை சந்தோசமாக இருக்கிறது. அது போன்று நீ மீண்டும் உன்னுடைய கணவருடன் இணைந்து வாழ்ந்தால்தான் எனக்கு முழு சந்தோஷம் என்று தந்தை ரஜினிகாந்த் தெரிவிக்க, நீங்க சொன்னா சரிதாப்பா என்று ஐஸ்வர்யா ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து ரஜினிகாந்த் வீட்டில் தனுஷ் அவருடைய மனைவி ஐஸ்வர்யா உட்பட குடும்பத்துடன் இந்த வருட தீபாவளியை கொண்டாடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா – தனுஷ் மீண்டும் இணைவது குறித்து உங்கள் மகிழ்ச்சியை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.