ஆளுநர் கையில் முக்கிய கோப்பு… அடுத்தடுத்து அமைச்சர் ராஜினாமா…

0
Follow on Google News

டெல்லியில் நடந்த சட்டமன்றத் தேர்தலை முடித்துவிட்டு ஒட்டுமொத்தமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பார்வை தமிழகம் பக்கம் திரும்பி இருக்கிறது. வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் அமித்ஷா, அதற்கான தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார்.

அந்த வகையில் இந்த வருடம் 2025 தொடக்கம் முதலே முதலிலேயே தொடர்ந்து திமுகவிற்கு ஒவ்வொரு அடியுமே பலத்த அடியாக விழுந்து கொண்டிருக்கிறது, அமைச்சர் துரைமுருகன், கே என் நேரு போன்ற மூத்த அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மறு பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜி – பொன்முடி போன்றோர் தங்களுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு, ராஜினாமா செய்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் இதற்கு முன்பு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி விடுவிக்கப்பட்ட அமைச்சர்கள் ஐ பெரியசாமி, எம் ஆர் கே பன்னீர்செல்வம், துரைமுருகன் போன்ற அமைச்சர்கள் விடுவித்ததை ரத்து செய்து செய்தும் மீண்டும் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பும் திமுகவை ஆட்டம் காண வைத்துள்ளது. குறிப்பாக இந்த வழக்குகள் அனைத்தும் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பே விசாரணை முடிந்து தீர்ப்பு வந்து விடும் என எதிர்பார்க்க படுகிறது.

இந்த நிலையில் திமுகவின் தலைமையின் சொத்து மொத்தம் சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என உளவுத்துறை மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனத்திற்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் திமுகவின் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்கள், ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்கள், ஒவ்வொரு அமைச்சர்களும், திமுக ஆட்சிக்கு வந்த பின்பு எவ்வளவு சம்பாதித்து இருக்கிறார்கள் என்கின்ற பட்டியலும் உளவுத்துறை மூலம் அமித்ஷாவுக்கு சென்றிருக்கிறது.

அதே நேரத்தில் தமிழக பாஜக கைவசமும் இந்த டேட்டா உள்ளதாகவும் விரைவில் இந்த மொத்த டேட்டாவையும் தமிழக பாஜக சார்பில் ஆளுநரிடம் பெட்டிசனாக கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில், விரைவில் இது குறித்து ஆளுநரும் அவருடைய அதிகாரத்திற்குட்பட்டு நடவடிக்கையில் எடுக்கலாம் என்றும் , இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நிலையில் சம்பந்தப்பட்ட திமுக அமைச்சர்களுக்கு கொடுக்கப்படும் நெருக்கடியில், எப்படி செந்தில் பாலாஜி – பொன்முடி ஆகியோர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்களோ.!

அதே போன்று மற்ற அமைச்சர்களும் அவர்களாகவே ராஜினாமா செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி இருவரும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்பு, சில முக்கிய நிறுவனங்கள் தமிழக முழுவதும் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுகவின் திமுக மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும்,

குறிப்பாக தமிழக மக்கள் திமுகவை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்ப மிகவும் ஆர்வத்தோடு 2026 தேர்தலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கருத்தும் கணிப்பு உறுதி செய்துள்ளது. அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி திமுகவின் வாக்கு சதவீதம் வெறும் 20 சக மிகப்பெரிய குறைந்து மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது என சமீபத்தில் தனியார் நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here