தஞ்சாவூர் மாவட்டம் தெற்குப் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவியும் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில் சில நாட்கள் முன்பு குளியலறைக்கு சென்ற வெங்கடேசன் மனைவி, அங்கு ஏதோ மின்னுவது போன்ற வெளிச்சம் ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் கணவரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து அங்கு வந்த கணவர் அது என்ன என்பதை பார்த்தபோது அது சிறிய வெப் கேமரா என்று தெரிந்தது. அந்த கேமராவின் சார்ஜ் குறைந்து விடக்கூடாது என்பதற்காக பவர் பேங்க் உடன் நீக்கப்பட்டிருந்தது மேலும் அதிர்ச்சி அடைந்தார் வெங்கடேசன். யாரோ தனது மனைவி மற்றும் மகள் குளிப்பதை படம் எடுப்பதற்காக செய்ததை அறிந்த இவர்கள் உடனடியாக மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர் அதில் வெங்கடேசன் வீட்டின் அருகில் இருக்கும் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் மகன் 35 வயதுடைய நசீர் அகமது என்று தெரியவந்தது. அவர்தான் வெப்கேமிராவை பொருத்தி வெங்கடேசன் வீட்டில் பெண்கள் குளிப்பதை பதிவுசெய்துள்ளார். வெங்கடேசன் வீட்டில் குளியல் அறையை ஒட்டி காலியான வீடு ஒன்று அமைந்துள்ளது. அந்த வீட்டின் ஓனர் வீடு பார்க்க வருபவர்களுக்கு வீடு கட்டுவதற்கான அருகிலுள்ள நசீர் அகமது இடம் சாவியை கொடுத்துள்ளார்கள்.
அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நசீர் அகமதுகாலியாக உள்ள வீட்டின் குளியல் அறை கண்ணாடி அகற்றிவிட்டு அதன் அருகில் இருக்கும் எங்கள் வீட்டின் குளியலறையில் கேமராவை வைத்து எனது மகள் மற்றும் மனைவி குளிப்பதை பார்த்து ரசித்து வந்துள்ளான்.
இவன் ஏற்கனவே எனது மனைவி மற்றும் மகள் குளிப்பதை மாடியிலிருந்து ரகசியமாக பார்த்து வந்தாள் இது தெரிந்த நான் ஒருமுறை அவரது தந்தையிடம் இது பற்றி கூறிய போதும் அவர் நசீரை கண்டிக்காமல் எங்களிடம் தகராறு செய்துள்ளார். போலீசார் நேற்று கைது செய்து வழக்குப்பதிவு செய்து நசீர் அகமதை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.