திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பெயரில் போலியான வாட்ஸப் கணக்கை தொடங்கி அரசு அதிகாரிகளுக்கு முறைகேடாக மெசேஜ்களை அனுப்பி மோசடியில் ஈடுபட முயன்றது பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியராக கடந்த ஓராண்டாக பதவி வகிப்பவர் வினீத் IAS. வினீத்தின் பெயர் மற்றும் புகைப்படம் கொண்ட வாட்சப் நம்பரிலிருந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுக்கே குறுந்செய்து சென்றுள்ளது. அந்த செய்தியில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். பணி எப்படி செல்கிறது என கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கேள்விகளுக்கு சிலர் பதிலும் அனுப்பியுள்ளனர். மேலும் அதிகாரிகளின் வங்கிக்கணக்குகளின் விபரங்கள் கேட்கப்படவே உஷாரான அதிகாரிகள் சந்தேகமடைந்து கலெக்டர் வினீத்தின் காதுகளுக்கு கொண்டுசென்றுள்ளனர். அப்போதுதான் கலெக்டர் பெயரில் கணக்கு தொடங்கி அதிகாரிகள் மற்றும் மக்களை ஏமாற்ற முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சைபர் க்ரைமில் புகார் அளிக்கப்பட்டது. ஸைபர்க்ரைம் காவல்துறையினர் அந்த மர்ம எண்ணை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூருக்கு இது ஒன்றும் முதல்முறையல்ல. இதற்க்கு முன்னாள் திருப்பூர் கலெக்டராக இருந்த விஜய்கார்த்திகேயன் பெயரிலும் இதுபோல ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்கப்பட்டது.
முகநூல் மற்றும் வாட்சப் மூலம் பணம் கேட்டுள்ளனர். அதுகுறித்த புகாரும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் ” இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் செல்போன் தவறை வைத்து ஆய்வு செய்ததில் ராஜஸ்தான் என தெரியவந்திருக்கிறது. காவல்துறையினர் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துவருகின்றனர்” என தெரிவித்தார்.