மக்கள் மன்றத்தை கலைத்த ரஜினி… விஜயகாந்தை சந்தித்த முதல்வர்… திசை திருப்ப நடந்த நாடகமா?

0
Follow on Google News

தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினி உடல்நிலை பரிசோதனைக்காக அமேரிக்கா சென்று சில தினங்கள் முன்பு தான் சென்னை வந்தார். சென்னை வந்தவுடன் ரஜினி தனது மக்கள் மன்றம் மாவட்ட செயலாளர்களுடன் உடனடியாக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இந்த செய்தி பெரும் அளவில் வைரல் ஆகியது. ரஜனி மீண்டும் அரசியலுக்கு வர போகிறாரா? உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதால் திமுகவுடன் கூட்டனி சேர போறாரா? என்ற வதந்திகள் பரவின.

ஆனால் நடந்ததோ வேறு மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் ரசிகர் மன்றத்தை தொடங்கினார். இவர் மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலுக்குள் நுலைய தான் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார். ரஜினியின் தீடீர் கூட்டம் முடிந்த பிறகு ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். ஆனால் இவர் மக்கள் மன்றத்தை கலைத்து மீண்டும் ரசிகர் மன்றமாக மாற்றியது தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

எதற்காக உடனடியாக மக்கள் மன்றத்தை கலைத்தார் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது அதற்கான காரணம் கசிந்துள்ளது. திருச்சி மாவட்டத்தை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 10,000 பேருடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைய இருந்துள்ளனர். இதற்காக முதல்வரை சந்திக்க நேரமும் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த செய்தி எப்படியோ அமெரிக்காவில் உடல் பரிசோதனை செய்துவிட்டு நாடு திரும்பிய ரஜினிக்கு தெரியவர, உடனடியாக காரணம் சொல்லாமல் விரைவாக ரஜினி மக்கள் மன்ற மாவட்ட மாவட்ட செயலாளர்களுடன் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.

அந்த கூட்டத்தில் மக்கள் மன்றத்தை கலைத்தது மூலம் திமுகவில் முதல்வர் முன்னிலையில் இணைய இருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி மாஸ்டர் பிளானால் திமுகவில் இணைய இருந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், அதற்குள் ரஜினி மக்கள் மன்றத்தை கதைத்தால் இனி அவர்கள் இணைந்தாலும் சல்லி பைசாவுக்கு தேராது என்று முதல்வர் ஸ்டாலினுக்கு புரிந்தது. இந்த செய்தி கசிந்தது வெளிவருவதற்குள் அதை முடி மறைக்க முதல்வர் ஸ்டாலின் தீடிர் என்று அரசியல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார்.

முதல்வர் ஸ்டாலின் விஜயகாந்தை சந்தித்த அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. முதல்வர் இந்த திருச்சி சம்பவத்தை முடி மறைக்க விஜயகாந்தை சந்தித்தாக, சில தரப்பினரிடம் வதந்திகளும் கிளம்புகின்றன. உண்மையில் முதல்வர் இந்த காரணத்திற்காக தான் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் என்று கூறப்பட்டாலும், இது எதார்த்தமாக நடந்ததா கூட நடந்திருக்கலாம் .