சென்னையில் கொட்டித்தீர்க்கும் மழை நாளை மறுநாள் முதல்தான் குறையும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இப்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்கி பல பகுதிகளில் கொட்டித் தீர்க்கிறது.
இந்நிலையில் தலைநகரான சென்னையில் நவம்பர் மாதத்தில் மட்டும் வரலாறு காணாத அளவில் நான்கு முறை 100 மிமி அளவு பதிவாகியுள்ளது. இதனால் சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் சாலைகளில் தேங்கியுள்ளது.
பல இடங்களில் கழிவுநீரோடு கலந்துவிடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் நாளை மறுநாள் முதல்தான் மழையின் அளவு குறையும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. அதன் பின்னர் சென்னை படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பும் என சொல்லப்படுகிறது.