மதுரை ஆதீனத்துக்கு எதிராக வெகுண்டு எழுந்த விஜய் ரசிகர்கள்.. இன்னும் ஸ்கூல் திறக்கவில்லையா.?

0
Follow on Google News

மதுரை : கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரை ஆதினம் கூறிய கருத்து விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. மேலும் ஆதீனத்தின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து மதுரையெங்கும் வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்தை ஒருமையில் அழைத்திருப்பது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த ஜூன் 5 அன்று துறவியர் மாநாடு மதுரையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மதுரை ஆதீனம் ” ஹிந்துக்களின் தெய்வங்களை திரைப்படங்களில் தவறாக சித்தரித்து பேசுகின்றனர். நடிகர் விஜய் விநாயகர் கடவுளை தரக்குறைவாக பேசியுள்ளார். அவர் நடித்த படங்களை பார்க்காதீர்கள்” என கூறியிருந்தார்.

இதனால் மதுரை ஆதீனத்திற்கு கண்டனம் தெரிவித்து மதுரை முழுவதும் விஜய் ரசிகர்கள் கண்டன போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில் ” மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேப்பா. நீங்க எல்லாம் தளபதி பத்தி பேசலாமா தப்பா. வீண்விளம்பரத்திற்க்காக கோமாவில் இருந்து எழுந்து பிதற்றுவதை நிறுத்து.

எங்களுக்கு மதம் ஜாதி எதுவும் இல்லை. தளபதிமேல் மக்கள் கொண்டாடும் அன்புக்கு வானமே எல்லை” என விஜய் ரசிகர்கள் மதுரை முழுவதும் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர். இதற்கு பதிலடியாக ஹிந்து அமைப்புகள் மற்றும் சில அமைப்புகள் நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த போஸ்ட்டரை பார்க்கும் பொதுமக்கள், ஸ்கூல் படிக்கும் விஜய் ரசிகர்கள்,இப்படி தான் படிப்பதை விட்டுவிட்டு ஏதவாது செய்து கொண்டிருப்பார்கள், தற்பொழுது பள்ளி விடுமுறை என்பதால் இது போன்று போஸ்டர் அடித்து ஒட்டி விளையாடி கொண்டிருக்கிறார்கள், ஸ்கூல் திறந்ததும், இது போன்ற செயல்கள் குறையும் என கிண்டலாக மக்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.