காஞ்சிபுரம் : தமிழகத்தில் நாளுக்குநாள் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெண்போலீஸ் உட்பட மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டிவருகின்றனர். மேலும் ஒரே வாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாகவும் மாநில சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் அடித்து கொல்லப்பட்டு ஏரியில் வீசப்பட்டிருந்தனர். இந்த வழக்கு மர்மமாகவே இருந்தது. தற்போது அந்த உண்மைகள் வெளிவந்து பெரும் பதட்டத்தை உண்டுபணியுள்ளது. காஞ்சிபுரம் அரசன்தாங்கல் பகுதியை சேர்ந்த நெசவு தம்பதிகள் மாணிக்கம் ((51) மற்றும் ராணி (47).
இவர்கள் இருவரும் அடித்துக்கொல்லப்பட்டு அரக்கோணம் அருகே அமைந்துள்ள கைலாசபுரம் ஏரியில் வீசப்பட்டிருந்தனர். அரக்கோணம் போலீசார் இதுகுறித்து விசாரணை நிலையில் அவர்கள் வறுமை காரணமாக காஞ்சிபுரத்தை சேர்ந்த சிலரிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியதாகவும் கடனை திருப்பிக்கொடுக்காததால் கடன்காரர்கள் அடித்தே கொன்றதாகவும் கூறப்பட்டது.
இதனிடையேவ் அரக்கோணம் டிஎஸ்பி ஆணையின்பேரில் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது. மேலும் கொலை நடந்ததாக கருதப்படும் இடத்தில் இருந்த செல்போன் டவர்கள் ஆய்வுசெய்யப்பட்டதில் மூன்றுபேர் அடிக்கடி பேசியது தெரியவந்தது. அவர்களை விசாரித்ததில் கொலைசெய்யப்பட்ட மாணிக்கத்தின் மருமகனான சாய்ராமின் சகோதரர் தரணி இந்த படுபாதக செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவரிடம் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் மாணிக்கத்திற்கு மருமகன் சாய்ராம் கடன்வாங்கி கொடுத்ததும் அவர் திரும்பித்தராததால் அவர்களுடன் தகராறு ஏற்ப்பட்டுள்ளது. மேலும் மனைவியும் பிரிந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். கிட்டத்தட்ட மனப்பிறழ்வு நோய்க்கு ஆளாகியதாக கூறப்படுகிறது.
மேலும் தனது அண்ணனுக்கு செய்வினை வைத்துவிட்டதாக நம்பியுள்ளார் தரணி. இதனால் கொந்தளித்த சாய் ராமின் சகோதரர் கூலிப்படையை ஏவி தம்பதிகளை கொன்றுள்ளார். அந்த கூலிப்படையினர் தம்பதிக்கு குறைந்த வட்டியில் பணம் வாங்கித்தருகிறோம் என கூறி ஏமாற்றி சோளிங்கர் பகுதிக்கு அழைத்து சென்று காருக்குள் வைத்து கம்பால் அடித்து கொன்றுள்ளனர்.
இந்த செயலில் ஈடுபட்ட கூலிப்படையினர் சந்திரன் மற்றும் சுனில் குமாரை போலீசார் கைதுசெய்துள்ளனர். சம்பந்தி வீட்டினர் சம்பவம் செய்த விஷயம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.