கோவை மேற்கு மண்டல டிஐஜியாக பணியாற்றிய விஜயகுமார் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜயகுமாருக்கு காவல் துறையில் பயிற்சி அளித்த ஓய்வு பெற்ற காவல்த்துறை அதிகாரி சித்தண்ணன், தற்கொலை செய்து கொண்ட விஜயகுமார் சம்பவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை சோகத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.
டிஐஜியாக விஜயகுமார் பணியாற்றிய கோவை போன்ற நகரங்களில் பெரிய அளவில் குற்ற சம்பவங்கள் நடைபெறாத ஒரு மாவட்டம். அந்த வகையில் அங்கே பணிபுரியும் காவல் துறை அதிகாரிகளுக்கு மிகப்பெரிய அளவில் டென்ஷன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்த ஓய்வு பெற்ற காவல்த்துறை அதிகாரி சித்தண்ணன்.
மேலும் காவல்துறையில் பணிபுரியும் எஸ் பி போன்றவர்களுக்கு தான் அழுத்தங்கள் அதிகமாக இருக்கும், ஏதாவது ஒரு குற்றச்சம்பவங்கள் நடைபெற்றால் டி ஐ ஜி போன்ற மேல் அதிகாரிகள், அவர்களுக்கு கீழ் பணியாற்றும் எஸ்.பி. யிடம் தான் அந்த குற்ற சம்பவம் குறித்து, என்னாச்சு என்னாச்சு என கேட்டு அழுத்தம் கொடுப்பார்கள். அந்த வகையில் எஸ் பி லெவலில் பணியாற்றுகின்ற காவல் துறை அதிகாரிகளுக்கு வேண்டுமானால் ஒரு மன அழுத்தம் இருக்கலாம்.
ஆனால் நான்கு மாவட்ட எஸ்பி- ஐ வழி நடத்துவது தான் ஒரு டி ஐ ஜி யின் வேலை, அந்த வகையில் டிஐஜிக்கு மிக கடுமையான பணி சுவை இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்த ஓய்வு பெற்ற காவல்த்துறை அதிகாரி சித்தண்ணன், மேலும் டி ஐ ஜி விஜயகுமார் இருந்த கோயம்புத்தூர் பகுதிகளில் மிகப்பெரிய குற்ற வழக்குகள், அதாவது காவல் துறை உயர் அதிகாரிகள் தற்பொழுது தலையை பிடித்துக் கொள்வது போன்ற எந்த ஒரு குற்ற வழக்குகள் கோவை பகுதியில் இல்லை.
இந்நிலையில் டிஐஜி விஜயகுமாருக்கு குடும்ப சூழல் காரணமாக சில பிரச்சனைகள் இருப்பதாக நான் கேள்விப்பட்டதாக தெரிவித்த ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் சித்தண்ணன் , மேலும் சமீபத்தில் ஒரு எஸ்பிஐ சந்தித்து பேசிய போது அவர் தன்னுடைய டி ஐ ஜி விஜயகுமார் பேசும்போதே டென்ஷனாகவே பேசுகிறார், ஆனால் இப்படி பேசக்கூடிய ஆள் அவர் இல்லை என கோயம்புத்தூரில் உள்ள சரகத்தில் உள்ள ஒரு எஸ் பி தன்னிடம் தெரிவித்து வருத்தப்பட்டதாக தெரிவித்த சித்தண்ணன்.
அந்த வகையில் அவருக்கு ஏதோ ஒரு மன அழுத்தம் தொடர்ந்து இருந்து வந்துள்ளது, சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சில மருந்துகள் சாப்பிட்டு வந்துள்ளார், மேலும் அவரின் உயர் அதிகாரிகள் நேரில் அழைத்து டி ஐ ஜி விஜயகுமாரை கவுன்சிலிங் செய்து, எங்க தான் குடும்ப பிரச்சனை இல்லை, என அவருக்கு கவுன்சிலிங் செய்து ஊக்கப்படுத்தியதாக கூட தான் கேள்விப்பட்டதாக தெரிவித்த சித்தண்ணன்.
மேலும் காவலர்களுக்கு தொடர்ந்து கவுன்சிலிங் கொடுத்து வந்தாலும் கூட, அங்கொன்றும் இங்கொன்றுமாக காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் உயர்ந்த பதவியில் இருக்கக்கூடிய ஒரு டிஐஜி, அதுவும் எந்த தீய பழக்கத்திற்கும் ஆளாகாத ஒரு நேர்மையான ஒரு காவல்துறை அதிகாரி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்றால் கண்டிப்பாக வேலை பளு காரணம் இருக்காது.
ஏனென்றால் தற்பொழுது இருக்கும் டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் மிக மென்மையாக காவல்துறை அதிகாரிகளை கையாளக் கூடியவர். அந்த வகையில் டிஐஜி சங்கர் ஜிவால் அவர்கள் எந்த ஒரு அதிகாரிகளுக்கும் அழுத்தம் கொடுத்து இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அதே நேரத்தில் டிஐஜி அந்தஸ்தில் உள்ள விஜயகுமாருக்கு அழுத்தம் வருவதற்கு காரணம் இல்லை, அவருடைய சொந்த பிரச்சனையாக இருக்கலாம், குடும்ப ரீதியான பிரச்சனை என சில தகவல் வந்து கொண்டிருக்கிறது என தற்கொலை செய்து கொண்ட டி ஐ ஜி விஜயகுமாருக்கு கவல்த்துறையில் பயிற்சி அளித்த ஆசிரியரும், ஓய்வு பெற்ற காவல்த்துறை அதிகாரியுமான சித்தண்ணன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.