கோயம்புத்தூர் அருகே வெள்ளியங்கிரி, மலையடிவாரத்தில் ஈஷா யோக மையம் அமைந்துள்ளது. இங்கே பிரம்மச்சாரிகள், முழு நேரத் சேவை செய்ய கூடியவர்கள் அங்கே தங்கியுள்ளனர். நான்கு வித யோகாக்களில், ஞான யோகம், கர்ம யோகம், க்ரியா யோகம் மற்றும் பக்தி யோகம் ஆகியவற்றை மக்களுக்கு இங்கே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதிகமான மக்கள் இந்த யோக பயிற்சியில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
ஈஷா யோக மையத்தில் யோக பயிற்சி வருடம் முழுவதும் அளிக்கப்படுகின்றன. ஈஷா யோக மையத்தில் தங்கியிருந்து செய்யக்கூடிய 3 நாள் உள்நிலை பொறியியல் வகுப்புகள் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹட யோகா, சூன்யா தியான வகுப்புகள், பாவ ஸ்பந்தனா மற்றும் சம்யமா போன்ற யோக பயிற்சிகள் ஈஷா யோக மையத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அவிநாசி பகுதியைச் சேர்ந்த பழனி குமார் மனைவி சுபாஸ்ரீ ஈஷா யோகா மையத்திற்கு யோகா பயிற்சிக்கு சென்றவர் மாயமானது தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் குவாலிட்டி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகின்றவர் பழனி குமார். அவருடைய மனைவி சுபாஸ்ரீ திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு ஒரு வார யோகா பயிற்சிக்காக கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு முதல்முறையாக பழனிக்குமார் மனைவி சுபாஸ்ரீ கலந்து கொண்டுள்ளார். அதேபோன்று மீண்டும் யோகா பயிற்சிக்காக கடந்த 11 டிசம்பர் அன்று மாலை 6 மணியளவில் யோகா ஈஷா மையத்தில் தனது மனைவியை விட்டு விட்டு சென்றுள்ளார் பழனி குமார்.
மீண்டும் டிசம்பர் 18ஆம் தேதி யோகா பயிற்சியை முடித்த தனது மனைவி சுபாஷிரியை அழைத்துச் செல்ல அன்று காலை 7 மணிக்கு இஷா யோகா மையத்திற்கு வந்து காத்திருந்துள்ளார் பழனி குமார். யோகா வகுப்பு 11 மணியளவில் முடியும், ஆனால் நீ சுபாஸ்ரீ யோகா பயிற்சி முடித்து வெளியில் வரவில்லை. இந்நிலையில் மாலை 3 மணி அளவில் யோகா மையத்தின் உள்ளே சென்று தனது மனைவி சுபாஷ் ஸ்ரீ குறித்து விசாரித்துள்ளார் பழனி குமார்.
அதற்கு ஈஷா நிர்வாகத்தினர் உங்கள் வகுப்பு அனைவரும் சென்று விட்டனர் என்று தெரிவித்துள்ளார்கள். பின்பு யோகா மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் பார்த்ததில் பழனி குமார் மனைவி சுபாஸ்ரீ காலை 9 மணிக்கு யோகா வகுப்பில் இருந்து சர்ப்ப வாசல் வழியாக வெளியே சென்று, ஒரு டாக்ஸியில் ஏறி சென்றது தெரியவந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ள பழனி குமார், தன்னுடைய செல்போன் நம்பருக்கு வந்த மிஸ் காலை மீண்டும் தான் தொடர்பு கொண்ட போது, அதில் அங்கிருந்து பேசியவர் ஒரு பெண் என் கணவரிடம் பேச வேண்டும் என்று அவருடைய தொலைபேசியை வாங்கி தனக்கு அழைத்ததாகவும், ஆனால் நான் தொலைபேசி எடுக்காததால் திரும்ப அவரிடம் போனை கொடுத்து விட்டார் என கூறிய பழனி குமார்.
தனது மனைவி கால் டாக்ஸியில் ஏறி சென்ற அந்த வாகனத்தின் நம்பரையும் தெரிவித்து, மேலும் அந்த கால் டாக்ஸி டிரைவரிடம் விசாரித்ததில் செம்மேடு முட்டத்து வயல் பகுதியில் தன்னுடைய மனைவியை இறக்கி விட்டதாக தெரிவித்தாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த பழனிக்குமார், தனது மனைவி எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை அக்கம்பக்கம் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், காணாமல் போன தனது மனைவி சுபாஸ்ரீயை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் பழனி குமார்.