சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த விசிட் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என கூறப்படுகிறது. மேலும் மிக சமீபத்தில் மயிலாடுதுறை சென்னை காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் NIA ரைடு நடத்தியிருந்தது. அதில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய சிலரையும் கைதுசெய்ததாக கூறப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் அடக்கும் அடுத்தடுத்த லாக் அப் டெத்துக்கள் மற்றும் தொடர் கொலை மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் தமிழக ஆளுநரை கவலைகொள்ளச்செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த டெல்லி விசிட் இருக்கலாம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் நடைபெற்ற NIA ரைடு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவின் பேரிலேயே நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆளும்கட்சி தரப்பில் கூறப்படுவதாவது “ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் சமீபத்தில் சந்தித்திருந்தார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளை குடியரசுத்தலைவருக்கு அனுப்பிவைக்க முதல்வர் ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாகவும்,
ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 22 சட்டமுன்வடிவு மாதிரிகள் ஆளுநர் தரப்பிடமே இருப்பதாகவும் அதை குடியரசுத்தலைவரிடம் வழங்கவே ஆளுநர் டெல்லி செல்கிறார்” என ஆளும்கட்சி தரப்பில் கூறப்படுகிறது. ஆளுநர் வட்டாரங்கள் தெரிவிக்கையில் ” ஆளுநரின் இந்த பயணம் அவரது குடும்பத்தினருடனான தனிப்பட்ட பயணம்.
டெல்லியில் இருந்து ஆளுநர் பிஹார் செல்கிறார். அங்கு பாட்னாவில் இருக்கும் புகழ்பெற்ற கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து பூஜைகள் செய்ய உள்ளார். ஆளுநரின் பயணம் ஒரு அரசியல் பயணம் அல்ல” என தெரிவித்துள்ளது. இருந்தாலும் குடியரசுத்தலைவர் தேர்தல் வருகிற ஜுலே மாதம் 18 அன்று நடைபெற உள்ளநிலையில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை மத்திய பிஜேபி அரசு தெரிந்துகொள்ள நினைத்திருக்கலாம் எனவும் அதனாலேயே ஆளுநர் டெல்லி பயணம் மேற்கொள்கிறார் எனவும் பலவாறாக கருத்துக்கள் நிலவிவருகிறது.