ஆத்மா இவர்களை மன்னிக்காது… ராஜிவ் படுகொலையில் உயிர்பிழைத்தவர் கண்ணீர் பேட்டி..!

0
Follow on Google News

சென்னை : நேற்று ராஜீவகாந்தி படுகொலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் மரணதண்டனை பெற்று மீண்டும் அதே நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது பலரின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. ஒரே வழக்கு பலவிதமான தீர்ப்புகள் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை சந்தேகத்திற்குள்ளாக்குவதாக பொதுமக்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராஜீவகாந்தி வெடிகுண்டு விபத்தில் சிக்கி கொடூரமாக கொல்லப்பட்ட நேரத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர் காவல்துறை கண்காணிப்பாளர் அனுசுயா. தற்போது ஓய்வில் இருக்கும் அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர். செய்தியாளர்களிடம் ” பிரதமராக இருந்த ராஜீவின் படுகொலையை சிபிஐ விசாரித்து வந்தது.

இதுதொடர்பான வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் சிபிஐயால் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் பலர் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் மேல்முறையீட்டிற்கு சென்ற போதும் அவர்கள் குற்றவாளிகளே என தீர்ப்பளிக்கப்பட்டது. பேரறிவாளன் உட்பட ஏழுபேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

உச்சநீதிமன்றம் அவர்கள் ஏழுபேரையும் குற்றவாளிகள் என கூறி தூக்குத்தண்டனை விதித்தது. பின்னர் கருணை அடிப்படையில் ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டது. ஆனால் தற்போது உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுவித்துள்ளது. ஒரு நீதிமன்றம் ஒரு வழக்கில் எத்தனை தீர்ப்புகளை தான் வழங்கும். ராஜீவகாந்தி உள்ளிட்ட 16 பேரை கொன்றுகுவித்தவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வது எப்படி சரியாகும்.

நீதிமன்றத்தின் நடைமுறைகளை புரிந்துகொள்ள முடியவில்லை. பேரறிவாளனுடன் சேர்த்து மற்ற ஆறுபேரையும் விடுவிக்கப்போகிறார்களா. அப்படியென்றால் அந்த ஏழுபேரும் செய்தது தியாக செயலா. கோவையில் குண்டுவெடிப்பில் ஈடுபட்டவரகளையும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்களையும் நீதிமன்றம் விடுவிக்குமா.

ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் முழுக்க சிறையில் இருக்கவேண்டும், ராஜிவ் கொலைக்குற்றவாளிகளுக்கு மன்னிப்பே கிடையாது. நீதிமன்றம் விடுவிக்கலாம். ஆனால் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா அவர்களை மன்னிக்காது” என முன்னாள் இன்ஸ்பெக்டர் அனுசுயா வருத்தத்துடன் செய்தியாளர்களிடம் கூறினார்.