பெண் ஊழியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மேனேஜர்… மகளிர் காவல் நிலையத்தில் புகார்..

0
Follow on Google News

சென்னை : இருபதாம் நூற்றாண்டுகளுக்கு பிறகே பெண்கள் தன்னம்பிக்கையுடனும் சுயமரியாதையோடும் வெளியுலகத்தில் வலம்வர ஆரம்பித்தனர். பெண்களுக்கு கல்வியே எட்டாக்கனி என்றிருந்த காலம் போய் கல்விதுறையமைச்சராகவே பரிணாமவளர்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் பெண்கள் சுகம் தரும் ஒரு பொருளாய் தற்போதும் பார்க்கப்படுவது சமூகத்தின் சாபம்.

நடுத்தர அடித்தட்டு பெண்கள் தங்கள் பணியிடங்களில் சந்திக்கும் அவலங்கள் பெரும்பாலும் சந்தைக்கு வருவதில்லை. ஆனாலும் ஒரு சில சம்பவங்கள் கேள்விப்படுகையில் நமது உதிரம் கொதிக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் சென்னையில் ஒரு வாகன விற்பனை சோரூமில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவலம் நம்மை கண்கலங்க வைத்துள்ளது.

சென்னை அண்ணாநகரில் செயல்பட்டுவரும் ஒரு தனியார் வெயிக்கிள் ஷோரூமில் அம்பத்தூரை சேர்ந்த ஒரு பெண் பணிபுரிந்துவந்துள்ளார். அவர் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரை கவனித்த மகளிர் போலீசார் கொதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணை அந்த ஷோரூமின் மேனேஜர் ராஜா அலுவலகத்தில் வைத்தே உதட்டு முத்தம் கொடுத்துள்ளார்.

மேலும் விஷயத்தை வெளியில் சொன்னால் வேலையிலிருந்து நீக்கிவிடுவதாக மிரட்டியதோடு கொலை மிரட்டலும் விட்டதாக கூறப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மேனேஜர் ராஜா தொடர்ந்து ஆபாசமாக போனிலும் நேரிலும் பேசியுள்ளார். தொடர்ந்து கொடுக்கப்பட்ட பாலியல் தொந்தரவால் மனமுடைந்து போன அந்த பெண் காவல்நிலையத்தை நாடியுள்ளார்.

மகளிர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மேனேஜர் ராஜா மீதான குற்றம் உறுதியானது. மேலும் ராஜா வேறு யாரிடமாவது சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளாரா என தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் ராஜாவை கைதுசெய்துள்ளனர். ராஜா அயனாவரத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!