சென்னை : மத்திய மாநில அரசுகள் தற்கொலையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் சாத்தியமற்றதே. எந்த ஒரு பிரச்சினைக்கும் உடனடி தீர்வு தற்கொலை என்றால் மனித இனமே இருக்காது என சமூக ஆர்வலர்கள் பலர் கூறியும் தற்கொலைகள் தமிழகத்தில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
தமிழகத்தில் மனநலப்பிரச்சினையால் பலர் தொடர்ந்து தற்கொலை செய்துவருகின்றனர். அவர்களுக்கு ஆலோசனை வழங்க மாநில சுகாதாரத்துறை 104 என்ற எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை மதுரவாயல் பகுதியில் அந்த நரம்பு உடைந்து போனதாக கூறி புதுமணத்தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் அருகேயுள்ள ஆலப்பாக்கம் தனலட்சமி நகரில் வசிப்பவர்கள் சக்திவேல் மற்றும் ஆர்த்தி. இவர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடைபெற்றது. சக்திவேல் ஆலப்பாக்கத்தில் காயலான் கடை நடத்தி வருகிறார். இதனிடையே கடந்த சில நாட்களாக புதுமணத்தம்பதிகள் இருவரும் மனஉளைச்சலுடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எப்போதும் வழக்கம்போல அதிகாலையில் கடையை திறக்கும் சக்திவேல் சம்பவத்தன்று கடையை திறக்க வரவில்லை. அவரது வீடும் உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. மேலும் உறவினர்களும் தம்பதிகளை தொடர்புகொள்ள முயன்றும் பயனில்லாமல் போகவே பதட்டமடைந்து வீட்டிற்கு வந்துள்ளனர். அதற்குமுன்னரே உறவினர் ஒருவர் பக்கத்துவீட்டுக்காரரிடம் நிலைமையை எடுத்து கூறிஉள்ளார்.
அவரும் சக்திவேலை அழைத்தும் பயனில்லாமல் போகவே போலீசாருக்கு தகவலை தெரிவித்துள்ளனர்.போலீசார் வந்து கதவை உடைத்தபோது அங்கிருந்த மின்விசிறிகளில் இருவரும் தூக்குமாட்டி இருந்திருப்பது தெரியவந்தது. போலீசார் வீட்டை சோதனையிட்டதில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில் ” ஆணுறுப்பின் முக்கிய நரம்பு உடைந்துவிட்டதால் நாங்கள் மனா உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.
எங்களது இந்த தற்கொலை முடிவுக்கு யாரும் பொறுப்பல்ல” என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலங்களை மீட்ட போலீசார் பிரேதபரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் அந்த நரம்பு கட் ஆனதால் புதுமணத்தம்பதியினர் தற்கொலையி செய்துகொண்டது சென்னையில் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.