திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவர் சென்னை வில்லிவாக்கத்தில் சொந்தமாக காய்கறி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தினமும் ரயிலில் பயணம் செய்வது வழக்கம். அப்போதுதான் ஒரு இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுடன் முதலில் நட்பாகப் பழகி வந்த கணேசன் நாட்கள் செல்லச் செல்ல அந்த நட்பு காதலாக மாற தொடங்கியது.
செல்போன்களில் கொஞ்சி விளையாடி வந்துள்ளனர் இந்த காதல் ஜோடி, இதுபோக நேரம் கிடைக்கும் போது எல்லாம் தனிமையில் சந்தித்து நெருக்கமாக காதலை வளர்த்து வந்துள்ளார். திடீரென்று வேறு ஒரு பெண்ணுடன் கணேசனுக்கு நிச்சயாகபட்டு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. இந்த விஷயம் காதலிக்கு தெரியவர காதலன் கணேசனிடம் தன்னை காதலித்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்கிறியே உனக்கு மனசாட்சியே இல்லையா என்று கதறி அழுதுள்ளார்.
ஆனால், கணேசன் வீட்டில் பார்த்த பெண்ணுடன் திருமணம் செய்ய விருப்பமாக இருந்து வந்துள்ளார், தொடர்ந்து கணேசனை தொடர்பு கொண்டு பேசிய அவருடைய காதலி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார், ஆனால் கணேசன் மனம் மாறவில்லை, இதனை தொடர்ந்து கணேசன் திருமணம் நடைபெறும் தேதி அன்று மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்த அவருடைய காதலி, அன்றுகாலையில் திருமணம் நடைபெற இருந்த இடத்திற்கு போலீசாருடன் சினிமா படத்தில் வருவது போன்று சென்றுள்ளார்.
தனது காதலி போலீசாருடன் திருமணம் நடக்கும் இடத்திற்கு வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணேசன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். போலீசாருடன் வந்த காதலி அங்கே இருந்தவர்களிடம் கணேசன் தனனை உயிருக்கு உயிராக காதலித்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக என்னை காதலித்து ஏமாற்றிவிட்டு தற்போது வேற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறார் என நடந்தவற்றை எடுத்து கூறியுள்ளார்.
மேலும், கணேசன் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை திருமண நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரிடமும் ஆதாரமாக காண்பித்து இந்த புகைப்படத்தை பார்த்து நீங்களே எனக்கு ஒரு நியாயத்தை சொல்லுக என கூறியுள்ளார் கணேசனின் காதலி, இதனை தொடர்ந்து திருமணம் பாதியிலே தடுத்து நிருத்தப்பட்டது, இதன் பின்பு போலீசார் கணேசனிடம் காதலியை சேர்த்து வைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் கணேசன் அதற்கு பிடி கொடுக்காததால் தற்போது கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் கம்பி எண்ணி வருகிறார் கணேசன்.