கொலை நகரமான தமிழகத்தின் தலைநகரம்… ஒரே மாதத்தில் எத்தனை கொலை தெரியுமா.?

0
Follow on Google News

சென்னை : சென்னை கொலைக்களமாக மாறிவருவதாகவும் ஒரே மாதத்தில் 19 கொலைகள் நடந்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில் இதுவரை பத்து கொலைகள் மட்டுமே நடந்திருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக தலைநகர் சென்னையின் புறப்பகுதியான திருவேற்காடு மேட்டுப்பாளையம் குப்பைகொட்டும் பகுதியில் நேற்று ஒரு தலையில்லாத உடல் எரிந்த நிலையில் ஒரு ஆணின் சடலம் கிடந்துள்ளது. அந்த பகுதியில் வந்த மக்கள் அதைக்கண்டு அலறியடித்து ஓடியுள்ளனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் வருவதற்குள் அங்கு மக்கள் கூட்டம் கூட ஆரம்பித்தது. சம்பவ இடத்திற்கு ஆவடி பூந்தமல்லி திருவேற்காடு காவல்துறையினர் வந்தனர். சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது தான் அந்த குழப்பம் எழுந்தது. எந்த காவல்நிலைய சரகத்திற்குட்பட்டது என போலீஸாருக்குள் விவாதம் எழுந்தது.

எங்க ஏரியா உங்க ஏரியா என வாக்குவாதம் முற்றியதாக கூறப்படுகிறது. கடைசியில் அந்த இடம் திருவேற்காடு பகுதி காவல்நிலையத்திற்கு சொந்தமானது என தெரிய வந்தது. அதையடுத்து அந்த பகுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொலை என்ன காரணத்திற்க்காக நடந்தது எனவும் யார் செய்திருப்பார் எனவும் முன்பகையா எனவும் பலகோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இதுவரை கொலைசெய்யப்பட்டவர் யார் என்ற தகவல் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.