நாட்டாமை படத்தில் வரும் டீச்சர் கதாபாத்திரத்தில் நாட்டாமை தம்பி பசுபதி என்னை கெடுத்து விட்டார் என ஊர் முழுவதும் சத்தமிட வைத்து, பின்பு அந்த டீச்சரை கொலை செய்துவிட்டு, டீச்சர் சாவுக்கு காரணம் நாட்டாமை தம்பி பசுபதி என அவர் மீது குற்றசாட்டுகளை சுமத்தி நாட்டாமை குடும்பத்திற்கு மிக பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி, ஊரை விட்டே நாட்டாமை தம்பி பசுபதியை ஒதுக்கி வைத்து விட செய்து விடுவார் அந்த படத்தின் வில்லன்.
இதே போன்று நாட்டாமை பட டீச்சர பாணியில் திட்டமிட்டு அண்ணாமலையை அசிங்கப்படுத்தி பொது வாழ்க்கையில் இருந்து அப்புறப்படுத்த போட்ட திட்டத்திலிருந்து சிக்காமல் அண்ணாமலை தப்பித்தது எப்படி என்கின்ற ஒரு தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை தான் அரசியலுக்கு வந்தால் என்னென்ன எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என்பதை ஏற்கனவே அறிந்தவர்.
பாஜக மாநில தலைவராக பதவி ஏற்ற அண்ணாமலை உடனே கட்சி அலுவலகத்தில் இருக்கும் அவருடைய அறைக்கு முன்னெச்செரிக்கையாக, கண்ணாடி கதவை மாட்டி அறைக்குள் என்ன நடக்கிறது, யாருடன் பேசுகிறார் என்பதை வெளியிலிருந்து அனைவரும் பார்க்கும்படி செய்தார் அண்ணாமலை. கட்சியை லாபி செய்து கொண்டு, கட்சிக்கு எந்த விதத்திலும் பிரயோஜனம் இல்லாதவர்களை அப்புறப்படுத்திவிட்டு தகுதியானவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார் அண்ணாமலை.
மேலும் ஆளும் கட்சிக்கு எதிராக அண்ணாமலையின் நடவடிக்கைகள் ஆளும் அரசுக்கும், ஆட்சியாளருக்கு மிக பெரிய தலைவலியாக அமைந்தது. இந்த நிலையில் அண்ணாமலையால் பாதிப்புக்கு உள்ளான பாஜகவில் இருக்கும் சிலர் திமுகவுடன் கைகோர்த்து அண்ணாமலையை எப்படி பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அகற்றுவது என திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் முக்கிய பத்திரிக்கை ஓன்று செய்தி வெளியிட்டது, அதில் பாஜகவில் இருக்கும் ஐந்து பெண்களை தயார் செய்து, அவர்கள் அண்ணாமலை மீது திடீரென பாலியல் குற்றம் சாட்டு சுமர்த்துவது இவர்கள் திட்டம் என நாளிதழ் ஓன்று செய்தி வெளியிட்டது. இதனால் அண்ணாமலைக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி, அவரை மாநில தலைவர் பொறுப்பில் இருந்து தூக்குவது தான் இவர்களின் திட்டம் என தகவல் செப்டம்பர் மாதமே வெளியானது.
கடந்த மாதம் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டு தற்பொழுது அக்கட்சியில் விலகியுள்ள காயத்ரி ரகுராம், பாஜக தலைவர் அண்ணாமலையின் தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்தவர். மேலும் அண்ணாமலை மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற அவதூறு குற்றசாட்டுகளை அண்ணாமலை மீது சுமத்தி வருகிறார் காயத்ரி ரகுராம்.
கடந்த அக்டோபர் மதம் துபாய் ஹோட்டலில் திமுக நிர்வாகிகளுடன் ரகசியமாக காயத்ரி சந்தித்த தகவல் ஓன்று வெளியானது. மேலும் திமுக குடும்ப உறுப்பினர் ஒருவரை சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் காயத்ரி இதற்கு முன்பு ரக்சியமாக பேசியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதமே, அண்ணாமலை மீது பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமர்த்துவதற்கு திட்டம் உள்ளது என செய்திகள் வெளியானது.
தற்பொழுது காயத்ரி ரகுராம் நடவடிக்கைகளையும், கடந்த செப்டம்பர் மாதம் வெளியான செய்திகளை ஒப்பிட்டு பார்க்கையில், அண்ணாமலையை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த மிகப்பெரிய சாதி திட்டம் தீட்டப்பட்டிருந்தது தற்பொழுது அம்பலமாகியுள்ளது என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.ஆனால் ஒரு ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை அவருக்கு இருக்கும் உளவுப்பிரிவு தொடர்பை பயன்படுத்தி கொண்டு, எதிரிகளின் சதி திட்டத்தை முறியடித்து உள்ளார் என்கிறது பாஜக வட்டாரங்கள்.