ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமையான புராதனமான ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலே தமிழக அரசின் சின்னமாக உள்ளது. மேலும் நம்பிக்கைகளின்படி 108 வைணவத்தலங்களில் மிக முக்கியமான ஒன்றாக இந்த திருக்கோவில் கருதப்படுகிறது. மேலும் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களை வெள்ளையர்கள் கைதுசெய்து நடத்தியே அழைத்துவரும்போது இந்த கோவிலின் மண்டபத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். கோவில் நிர்வாகப்பணிகளில் தோராயமாக முப்பதிற்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனிடையே ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லபுரம் தெருவில் வசிக்கும் கர்ணன் எனும் மாற்றுத்திறனாளி ஆண்டாள் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்துவருகிறார்.
இவருக்கு நிர்வாக செயல் அலுவலர் மற்றும் சில அட்யிகாரிகள் தொடர்ந்து கடுமையான பணிச்சுமை கொடுத்து கொடுமைப்படுத்துவதாக விமர்சனம் எழுந்துவந்து. இந்நிலையில் கோவில் அலுவலகத்தில் உள்ள நாற்காலி ஒன்றை இடத்திற்கு எடுத்துச்செல்ல அதிகாரிகள் கட்டளையிட்டுள்ளனர். அதன்படி கர்ணன் நாற்காலியை எடுத்துச்செல்ல முற்படும்போது கோவில் கணக்கர் கர்ணனை பின்னாலிருந்து மிதிக்கும் சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் தனது உடல்குறைபாடு மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தை காட்டி கர்ணன் பணிச்சுமையை குறைக்க அவரை இரவுப்பணியில் அமர்த்தி மனஉளைச்சலை அதிகாரிகள் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. கோவில் கணக்கர் கர்ணனை உதைக்கும்போது அங்கிருந்த பணியாளர்கள் அந்த சம்பவத்தை கண்டிக்காமல் பார்த்து ரசித்து சிரித்துள்ள காட்சியும் வீடியோவில் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அதிகாரிகள் மற்றும் செயல் அலுவலர் துறைரீதியான எடுக்க கோரிக்கை வலுத்துவருகிறது. மக்களிடையே இந்த செயலுக்கு கடும்கண்டனங்கள் குவிந்துவருவது குறிப்பிடத்தக்கது.