பெண் தோழியால் வசமாக சிக்கும் சவுக்கு சங்கர்…. இனி தப்பிக்க வழியே இல்லை…

0
Follow on Google News

கடந்த அதிமுக ஆட்சியில் சவுக்கு சங்கர் தரம் தாழ்ந்து அவதூறு பரப்பும் வேலையில் ஈடுபட்ட போது கடுமையான நடவடிக்கைகளை, அப்போது அதிமுக அரசு எடுத்திருந்தால் இந்த அளவுக்கு இன்று சவுக்கு சங்கர் பெருமளவில் பேசப்பட்டு இருக்க மாட்டார். அதாவது முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருப்பார் சவுக்கு சங்கர். அந்த வகையில் சவுக்கு சங்கர் வளர்வதற்கு முக்கிய காரணம் கடந்த முறை ஆட்சியில் இருந்த எடப்பாடி தலைமையிலான ஆட்சி தான் என்கிற விமர்சனமும் உண்டு.

இந்நிலையில் தற்பொழுது திமுக அரசு சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதை திமுகவை விமர்சனம் செய்யக்கூடிய பொதுமக்களும், திமுகவை விமர்சனம் செய்ய கூடிய பத்திரிக்கையாளர்களும் சரி, திமுக அரசின் இந்த நடவடிக்கைகளை வரவேற்று பேசி வருகிறார்கள். அந்த வகையில் சவுக்கு சங்கர் கருத்துச் சுதந்திரம் என்கின்ற பெயரில் அவர் பரப்பும் அவதூறு என்பது எல்லை மீறிய செயலாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் பெருமளவு சொத்து சேர்த்துள்ளதாக வரும் புகார்களை எடுத்து, அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்படலாம் என்றும், அந்த வகையில் தற்போது சவுக்கு சங்கரின் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளே வருவதற்கான வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக இருப்பதாகவே சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் சவுக்கு சங்கர் தொடங்கிய நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சம்பளம் எங்கிருந்து சவுக்கு சங்கர் கொடுத்தார்.?

அவர் செய்த தொழிலுக்கு யாரெல்லாம் பின்புறமாக இருந்து முதலீடு செய்தார்கள் என்பதை லஞ்ச ஒழிப்பு துறையினர் வெளியே கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சவுக்கு சங்கர் தான் தொழில் தொடங்குவதற்கு தன்னுடைய நண்பர்கள் உதவி செய்வதாக தெரிவித்த நிலையில், அந்த நண்பர்கள் யார் என்பதை கண்டறிந்து, இந்த வழக்கின் உள்ளே கொண்டுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

இந்நிலையில் சவுக்கு சங்கரின் பெண் தோழி மாலதியும் இந்த வழக்கின் உள்ளே வருவதற்கான வாய்ப்பு இருக்கு என்றும், காரணம் சவுக்கு சங்கர் பெண் தோழி மாலதி பெயரில் சவுக்கு சங்கர் சொத்துக்கள் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளதால், இது தொடர்பான விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை கையில் எடுப்பார்கள் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்செய்திவாசிப்பாளராக இருந்த மாலதி சவுக்கு சங்கரின் பினாமி என பலரும் கூறி வருகின்றனர்.

சவுக்கு சங்கர் மாலதியை பினாமியாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளதாக, சவுக்கு சங்கரின் மனைவி நிலவு மொழி தெரிவித்துள்ளார். அதாவது வெறும் 14,000 ரூபாய் வாடகை வீட்டில் வசித்து வந்த மாலதி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தி.நகரில் 3.5 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது,

மாலதி பெயரில் ரூ.3.5 கோடி கொடுத்து சவுக்கு சங்கர் வாங்கிய சொத்தில், 2.5 கோடியை கருப்பு பணமாகவும், அதனால் ரூ.1 கோடிக்கு அந்த வீட்டை வாங்கியதாக கணக்கு காட்டி ஏமாற்றி உள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை முன் வைத்து வரும் நிலையில், சவுக்கு சங்கர் விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் அமலாக்கதுறை உள்ளே என்ட்ரி கொடுக்கம் பட்சத்தில், அவருடைய பெண் தோழியிடம் நடத்தப்பட இருக்கும் விசாரனையில் சவுக்கு சங்கர் வசமாக சிக்குவார் என்றும் கூறப்படுகிறது.