திருமணம் செய்து அவர்களுடன் தாம்பத்திய உறவில் உள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து மிரட்டி வந்த நபர் கைது. சென்னையில் தாம்பரத்தில் இன்ஜினியரிங் வேலை பார்த்து வருபவர் சபீக் அகமது. இவர் ஆன்லைனில் திருமண வரன் தேடி வந்துள்ளார். இது சபீக் அகமதுக்கு மூன்றாவது திருமணம். இவருக்கு ஏற்றார் போல் ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் மூன்றாவது திருமணத்திற்கு வரன் தேடி வந்துள்ளார்.
அப்போது சபீக் அகமதுக்கும் இந்த பெண்ணிற்கும் ஒத்துப்போக இருவரும் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்க, கொரோனா வைரஸ் பரவுவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருவரும் வீட்டில் இருந்து பணியாற்றினார். இந்த காலத்தில் பெண் கர்ப்பம் ஆனார். முக்கியமாக கொரோனா ஊரடங்கு கட்டத்தில்தான் அதிகமான பெண்கள் தாய்மை அடைந்தனர்.
சபீக் அகமதுக்கு மனைவி கர்ப்பம் ஆனதை விரும்பாமல், மனைவி கட்டாய படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தார். இதனால் மனமுடைந்த அந்த பெண் சபீக்கை விவகாரத்து செய்து விட்டு தாயுடன் வாழ்ந்து வருகிறார். விவாகரத்து செய்த பின்பும் மனையின் செல்போன் எண்ணிற்கு அடிக்கடி போன் செய்து மீண்டும் தன்னுடன் வாழ வரவேண்டும் என்று டார்ச்சர் செய்துள்ளார். தன்னுடன் வந்து வாழ மறுத்த மனைவியின் செல்போன் எண்ணிற்கு கணவன் மனைவியாக வாழ்ந்த போது நெருக்கமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.
மனைவியின் எண்ணிற்கு சில புகைப்படங்களையும் அனுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அந்த நேர கமிஷனர் ஆபீஸ் க்கு சென்று புகார் அளிக்க, போலீசார் உடனடியாக கைது சபீக் இடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் மீது நடைபெற்ற விசாரணையில் இவர் மீண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்து இதேபோன்று ஏமாற்றி உள்ளது தெரியவந்தது. நீண்ட விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார்.