அதிமுகவின் உட்கட்சி மோதல் தற்பொழுது உச்சக்கட்டம் அடைந்துள்ளது, அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு பாஜகவின் திரைமறைவு ஆதரவுடன் தமிழக முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னிர்செல்வம், பாஜகவின் செல்ல பிள்ளையாக இருந்த ஓபிஎஸ், முதல்வராக பதவியேற்றது தொடங்கி பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவைத்தது சசிகலா மற்றும் குடும்பத்தினர்.
இதனை தொடர்ந்து சசிகலா முதல்வராக பதவியேற்க தீவிர நடவடிக்கைகள் நடந்து வந்த நிலையில், முதல்வர் பதவி ஏற்பதற்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா, இதனை தொடர்ந்து சசிகலா ஆதரவுடன் முதல்வரானார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, என இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்ததை தொடர்ந்து இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அடுத்த சில மாதங்களில் ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் இணைந்த பின்பு இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்டது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் இருவரும் கட்சியை வழிநடத்தி வந்தனர், இருந்தாலும் அதிமுகவில் இபிஎஸ் அதிகாரம் நாளுக்கு நாள் அதிகரித்தது, ஓபிஎஸ் செல்வாக்கு குறைந்து கொண்டே சென்றது, இருந்தும் டெல்லி பாஜகவின் செல்ல பிள்ளையாகவே இருந்து வந்தார் ஓபிஎஸ், நடந்து முடிந்த சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலின் போது எடப்பாடி உரிய மரியாதையை பாஜகவுக்கு தரவில்லை,
மேலும் உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தலிலும் பாஜக எங்களுக்கு தேவையே இல்லை என்பது போன்று நடந்து கொண்டார் எடப்பாடியார், ஆனால் பாஜகவுக்கு உரிய மாறியதை கொடுக்கும் விதத்தில் தொகுதி பங்கீடு இருக்க வேண்டும் என ஓபிஎஸ் நடந்து கொண்ட விதம் எடப்பாடி மீது டெல்லி பாஜகவுக்கு கோபமும், ஓபிஎஸ் மீது நம்பிக்கையும் கூடியது, இந்நிலையில் தற்பொழுது ஓபிஎஸை அதிமுகவில் இருந்து முழுவதும் அப்புறப்படுத்திவிட்டு அதிமுகவின் தலைமையை கைப்பற்றும் வேலைகளில் இறங்கியுள்ளார் எடப்பாடி.
அதிமுகவில் பெருமளவு ஆதரவு எடப்பாடி பக்கம் இருந்தாலும் டெல்லி பாஜக ஆதரவு ஓபிஎஸ் பக்கமே உள்ளது என கூறப்படுகிறது , இதன் காரணமாக தான் அதிமுக உட்கட்சி பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் ஓபிஎஸ் டெல்லி பயணம் அமைத்துள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமி திரைமறைவில் காங்கிரஸ் உதவியை நாடியுள்ளதாக கூறப்படும் நிலையில் ஓபிஎஸ் க்கு முழு ஆதரவு டெல்லி பாஜகவில் இருந்து கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் விரைவில் கொடநாடு கொலை வழக்கு, மேலும் எடப்பாடி குடும்பத்தினர் மற்றும் அவருடைய சம்பந்தி மீது உள்ள ஊழல் புகார், என அனைத்தும் தூசி தட்டி துரிதமாக விசாரிக்கப்பட்டு, அதிமுகவை கைப்பற்ற துடித்த சசிகலா சிறைக்கு சென்றது போன்று எடப்பாடியும் சிறைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், மேலும் எடப்பாடி சிறைக்கு செல்வதற்கு முன்பே அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம்.
மீண்டும் அதிமுக உட்கட்சியின் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கவனத்துக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால். அதிமுக முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு படையெடுக்க இப்போது இருந்தே திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது, மேலும் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக பக்கம் தாவினால் தான் தங்களுக்கு பாதுகாப்பு என்பதை உணர்ந்து பாஜக முக்கிய தலைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரதத்தில் கூறப்படும் நிலையில் அழிவின் விழிப்பில் இருக்கிறது அதிமுக என்பது குறிப்பிடதக்கது.