மக்களே உஷார்… பலகோடி மக்கள் பணத்தை சுருட்டிய நிறுவனம்.. பரிதவிக்கும் மன்னார்குடி மக்கள்..

0
Follow on Google News

மன்னார்குடி : தமிழக அரசும் தமிழக காவல்துறையும் எவ்வளவு அறிவுரை கூறினாலும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி தங்கள் பணத்தை இரட்டிப்பாக்க தனியார் நிதிநிறுவனங்களை நோக்கி மக்கள் தொடர்ந்து படையெடுத்துவருகின்றனர், கடந்த சிலவருடங்களுக்கு முன்னர் நடிகர் சத்யராஜ் ஈமுகோழி வளர்த்து பணக்காரராகலாம் என மக்களிடம் விளமபற்படுத்தினார். அதில் பலகுடும்பங்கள் தெருவிற்கு வந்ததுதான் மிச்சம்.

அதேபோல கடந்தவாரத்தில் ஆருத்ரா எனும் நிறுவனம் மக்களின் ஆசையை தூண்டி பலகோடி நிதிமோசடியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மன்னார்குடி பகுதியிலும் இதே சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. அமுதசுரபி சிக்கனம் மற்றும் கூட்டுறவு கடன்சங்கம் என்ற பெயரில் ஒரு தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டுவந்தது.

மன்னார்குடி கோபால சமுத்திர வீதியில் செயல்பட்டு வந்த இந்த நிறுவனத்தில் வாஞ்சியூர், மன்னார்குடி, பாமணி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடைக்காரர்கள் வியாபாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் சேமிப்பு நிதியை அங்கே கணக்கு ஆரம்பித்து செலுத்தி வந்துள்ளனர்.இதில்சிலர் தினசரி சேமிப்பாக ஐநூறு ஆயிரம் என வழங்கி வந்துள்ளனர்.

இந்த நிறுவனம் சேலம் மற்றும் ஈரோடு பகுதியை சேர்ந்த ஆறு பெரும்புள்ளிகளை பார்ட்னர்களாக கொண்டு இயங்கிவந்துள்ளது. ஒழுங்காக செயல்பட்டுக்கொண்டிருந்த இந்த நிறுவனம் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக இழுத்துமூடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதில் பலர் சந்தேகமடைந்துள்ளனர். அதன்பின்னர் இருநாட்களுக்கு முன்னர் மீண்டும் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

இதற்காகவே காத்திருந்தது போல பயந்துபோன மக்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டனர். வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் பணத்தை திருப்பித்தருமாறு கூச்சலிட தொடங்கினர். தகவலறிந்த போலீசார் உடனடியாக நிறுவனத்திற்கு விரைந்தனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் ஐம்பதுலட்சம் வரை கையாடல் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணைக்காக ஊழியர்கள் இருவரை போலீசார் காவல்நிலையம் அழைத்துச்சென்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆறு பங்குதாரர்களில் ஒருவர் கையாடல் செய்ததாக தெரியவந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் பணத்தை திரும்பத்தருவதாக நிறுவனம் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டாலும் வாடிக்கையாளர்கள் காசோலைகள் பல பணமில்லாமல் திரும்பியதாக தெரியவந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் கூற்றுப்படி அவர்களின் சேமிப்பு நிதிப்படியும் கிட்டத்தட்ட ஒண்ணரை கோடிக்கு மேல கையாடல் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும் இன்னும் புகார் கொடுக்கவில்லை. அந்த மதிப்பையும் சேர்த்தால் இன்னும் சிலகோடிகள் கூடலாம் என கூறப்படுகிறது.