தமிழ்நாடு : தமிழ்நாடு மற்றும் காரைக்காலில் திடீரென நேற்று NIA அதிகாரிகள் நடத்தினர். கிட்டத்தட்ட 9 இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் பயங்கவாத அமைப்புடன் தொடர்பிருப்பதற்கான ஆவணங்கள் NIA வசம் சிக்கியுள்ளதாக தெரிகிறது. இதற்கெல்லாம் காரணம் போலீசாரை நோக்கி நீட்டிய துப்பாக்கிதான் என்பது திகைப்பூட்டும் விஷயம்.
கடந்த பிப்ரவரி 21 அன்று மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தின் அருகே காலை 11.30 மணியளவில் கருப்பு நிற ஸ்கார்பியோ ஒன்று சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அதிவேகமாக சென்றது. அதை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அந்த காரில் மொத்தமாக ஐந்துபேர் இருந்துள்ளனர். போலீசார் விசாரித்துக்கொண்டிருக்கையில் காரின் ஓட்டுநர் தப்பியோட முயன்றுள்ளார்.
போலீசால் விடாமல் துரத்திப்பிடித்தனர். அவனிடம் போலீசார் துருவித்துருவி விசாரித்ததில் அவன் பெயர் ரஹ்மத் எனவும் சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. அதேநேரத்தில் காரின் பின்புறம் இருந்த நான்கு பேரில் ஒருவன் திடீரென போலீசை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.
” எங்களை தொட்டால் நான் சுட்டுவிடுவேன். நான் யாரென்று தெரியுமா. நான்தான் நீடூர் சாதிக் பாஷா. என்னுடைய காரையே நிறுத்துகிறீர்களா” என கோபமாக பேசிக்கொண்டிருக்கையில் துரிதமாகவும் சாதுர்யமாகவும் செயல்பட்ட காவல்துறையினர் அவனை மடக்கிப்பிடித்தனர். அவனுடன் இருந்த முகம்மது ஆசிக்,ஜெகபர் அலி, முகம்மது இர்பான் ஆகியோரை கைதுசெய்தனர்.
இவர்களிடம் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் ஏதேனும் நாசவேலையில் ஈடுபட தயாரானார்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த தகவல் மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் கொண்டுசெல்லப்பட்டது. திருச்சி மத்திய சிறையில் இருக்கும் அவர்களை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிடப்பட்டதன் பேரில் நேற்று NIA சாதிக் பாஷா மற்றும் அவனது கூட்டாளிகள் வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.