வெள்ள நீரை உள்வாங்கும் அதிசய கிணறு… ஆராட்சியில் கிடைத்த மர்ம தகவல்…… தீடிரென நிரம்பியது பின்னனியில் அதிகாரிகளின் அலட்சியம்..

0
Follow on Google News

தென் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்து உள்ளது. பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டு வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளத்தில் அதிசய கிணறு எப்படிப்பட்ட மழை பெய்தால், வெள்ளம் வந்தாலும் இந்த கிணறு நிரம்புவதே இல்லை என அப்பகுதி தெரிவிக்கின்றனர். கடந்த 2022-ல் பெருமழை பெய்து உருவான வெள்ள நீர் கிணறுக்குள் திருப்பிவிடப்பட்டது. அப்போதும், இந்த கிணறு நிரம்பவில்லை.

இதையடுத்து, ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், இந்த கிணறு, முழுக்க சுண்ணாம்புப் பாறைகளால் உருவானது என்பது தெரிய வந்தது. அதாவது கிணற்றுக்கு அடியில் சுண்ணாம்பு நீர்வழிப்பதை இருப்பதாகவும், அதனால் கிணறு தண்ணிரை உள்வாங்குகிறது, அதன்மூலம் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயருகிறது என்றும் அந்த ஆய்வின் முடிவில் வந்துள்ளது.

மேலும் பல ஆண்டுகளாக இந்த கிணற்றில் தண்ணீர் கொட்டி வருவதால், பாறையில் துளைகள் ஏற்பட்டது. அவை பெரிதாகி, 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடியில் நீர்வழிப்பாதை உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாகவே கிணறு நிறைவதில்லை என கண்டறியப்பட்டது. நெல்லை தாமிரபரணியில் 1 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டு, காற்றாற்று வெள்ளத்தால் அதிகப்படியான உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வெள்ளநீர் திசையன்விளை அருகே ஆயன்குளம் அதிசய கிணறுக்கு செல்கிறது.

கடந்த ஆண்டுகளில் 2 ஆயிரம் கன அடி நீரை உள்வாங்கிய இந்த அதிசய கிணறு தற்போது பல மடங்கு தண்ணீரை உள்வாங்கி வந்தது. தற்போது நான்கு மாவட்டங்களை வெள்ளம் மூழ்கடித்து வரும் நிலையிலும், இந்த அதிசயக் கிணறு நிரம்பாமல் எத்தனை ஆயிரம் கன அடி நீரையும் கொஞ்சமும் சளைக்காமல் இந்த ஆயன்குளம் அதிசய கிணறு உள்வாங்கிக் கொண்டிருந்த நிலையில், பல ஆயிரம் கன அடி நீரையும் உள்வாகும் திறன் கொண்ட ஆயன்குளம் அதிசய கிணறு திடீரென நிரம்பியதாக தகவல் பரவியது.

இந்நிலையில், கிணறு நிரம்பியதற்கான காரணம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிகாரிகளின் மெத்தனத்தால் உள்ளே விழுந்து தண்ணீரை அடைத்துக் கொண்டது. கடந்த வருடமே இங்கே வந்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளார் கிணற்றை சுத்தம் செய்து தூர்வார முடிவு செய்தனர். ஆனால் அதை செய்யவில்லை. அப்படியே பார்த்துவிட்டு சென்றுவிட்டனர்.அதோடு இல்லாமல் அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகள் போடப்பட்டதின் விளைவு பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளே அடைத்துக்கொண்டது. . அதிகாரிகள் அலட்சியம், சரியாக தூர்வாராமல் போனதே.. இந்த முறை தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என்கிற குற்றசாட்டு எழுந்துள்ளது

மேலும் கிணற்றின் ஓரம் உள்ள மண் சுவர் இடிந்து, கிணற்றுக்குள் விழுந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கிணறு நிரம்பியது தெரியவந்துள்து. இந்நிலையில் தற்பொழுது பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பினை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் ஆயன்குளம் அதிசய கிணறு வெள்ள நீரை உள்வாங்கி வந்த நிலையில்.

கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து கிணற்றுக்குள் விழுந்ததால் அடைப்பு ஏற்பட்டு தற்போது அந்த கிணறு நிரம்பியுள்ளதையடுத்து, தமிழக அரசு இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து கிணற்றில் சரிந்த மணலை தூர்வாரினால் மட்டுமே சுற்றியுள்ள சுமார் 15கி.மீ.,தொலைவில் அமைந்துள்ள கிணறுகள் அனைத்திலும் நீர்மட்டம் உயரும் என்றும் மேலும் இந்த அதிசய கிணறை பாத்துக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்கிற கோரிக்கை அந்த பகுதி மக்களிடம் எதிரொலித்து வருகிறது குறிப்பிடதக்கது.