மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை வெளியாகி ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா மீதான சந்தேகம் மேலும் வலுத்துள்ளது. ஜெயலலிதா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நாளன்று அவர் முதல் மாடியில் உள்ள தனது அறையின் குளியலறையில் இருந்து திரும்பி படுக்கையை அடைந்தபோது மயங்கி விழுந்தார். அப்போது அங்கிருந்த சசிகலா உள்ளிட்டோர் அவரைத் தாங்கிப் பிடித்தனர்.
ஜெயலலிதா மயக்கமடைந்த நிலையிலேயே அவரது போயஸ் கார்டன் வீட்டில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் மயக்கமடைந்த பின்னர் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் சசிகலாவால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்றும். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சசிகலாவின் உறவினர்களாலேயே அறைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன என்றும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையால் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுவதை தவிர, வேறு எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் ஆணையத்தின் முன் வைக்கப்படவில்லை. டாக்டர் ரிச்சர்ட் பீலே, ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல தயார் என்று கூறியிருந்தும், அது ஏன் நடக்கவில்லை?. டாக்டர் சமின் ஷர்மா, ஆஞ்சியோ செய்வதைப்பற்றி விளக்கிய பின், டாக்டர் ரிச்சர்ட் பீலேவும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால், அது ஏன் நடக்கவில்லை?. இதனை கருத்தில் கொண்டு சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது என ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவர் எந்த நேரத்திலும் டிஸ்சர்ஜ் செய்யப்படலாம் என வெளியிடப்பட்ட அறிக்கை பொய்யானது என்றும், ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார் அளித்த சாட்சியத்தில், ‘கேக் அல்லது இனிப்புகள் சாப்பிடுவதை ஜெயலலிதா தவிர்க்கவில்லை. மருத்துவமனையில் கூட அவ்வப்போது அவற்றை எடுத்துக்கொண்டார். மருத்துவமனை கட்டுப்பாட்டில் இருந்தபோதிலும் பழங்கள் மற்றும் இனிப்புகளை அவர் உட்கொண்டார்.
உயர்தர சாக்லெட் நிற ஐஸ்கிரீம்களை எடுத்துக்கொண்டார். சில நேரங்களில் பரிந்துரைக்கப்பட்ட உணவு கட்டுப்பாடுகளை தளர்த்தி, நிறைய கேக் மற்றும் இனிப்புகளை எடுத்துக்கொண்டார். ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில்கொண்டு பொட்டாசியம், சர்க்கரை உணவுகள் உட்கொள்வதை கட்டுப்படுத்த வேண்டி இருந்தாலும், அவருக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி மேற்கூறிய உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டன.
பல ஆதாரங்களை கவனமாக ஆய்வு செய்ததில், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்காமல் இருந்ததால் அவருடைய உடல்நிலை வேகமாக மோசமடைந்தது என ஆறுமுகசாமி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆறுமுகசாமி அறிக்கை வெளியான பின்பு சசிகலா மீது பல சந்தேகங்கள் எழுந்துள்ளது,அதில் ஜெயலலிதா எடுத்துக்கொண்ட உணவுகள் அனைத்தும் அவர் உடல்நிலைக்கு எதிரான உணவுகள்.
இந்த உணவுகள் ஜெயலலிதா உடல்நிலையில் மேலும் மோசம் அடைய செய்யக்கூடிய ஸ்லொவ் பாய்சன் என்று சொல்லலாம். ஆனால் இதை கருத்தில் கொண்டு இது போன்ற உணவுகளை ஜெயலலிதாவுக்கு கொடுப்பதை சசிகலா தவிர்த்து இருக்கலாம். விரைவில் ஜெயலலிதா உடல் அபாயகட்டத்துக்கு செல்லட்டும் என்கிற எண்ணத்தில் கூட சசிகலா இது போன்ற உணவுகளை ஜெயலலிதா சாப்பிடட்டும் என்று விட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா இறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவது மரணம் குறித்து அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பி.எச்.பாண்டியன், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் காரசாரமான வாக்குவாதங்கள் நடந்ததாக தெரிவித்தவர். சசிகலாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் யாரோ ஒருவரால் ஜெயலலிதா கீழே தள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளில் சசிகலா குடும்பத்தினர் வருத்தப்படவோ அழவோ இல்லை. மாறாக தமது உறவினர்கள் அனைவரையும் மருத்துவமனை முழுவதும் நிரப்பியிருந்தார்கள் என்று பி.எச். பாண்டியன் தெரிவித்தததை தற்பொழுது எளிதாக கடந்து செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.