போதை பொருள் கடத்தல் மாஃபியா கும்பலின் தலைவன் ஜாபர் சாதிக் தப்பி ஓடி தலைமறைவாக பதுங்கி இருந்த நிலையில், அவனை தீவிரமாக தேடி வந்த போதை பொருள் தடுப்பு போலீசார் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் வைத்து கைது செய்தனர். போதை பொருள் மாமியார் கும்பலின் தலைவன் ஜாபர் சாகித் கைது செய்வதற்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு வீட்டில் பூட்டை உடைத்து சோதனை செய்த போதை பொருள் தடுப்பு போலீசார்.
அங்கிருந்து அவர் வீட்டில் இருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்கை கைப்பற்றி, ஜாபர் சாதிக்கை சந்திக்க யாரெல்லாம் அவர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்கள் என்பதை ஜாபர் சாதி கைது செய்வதற்கு முன்பே கண்டுபிடித்து அந்த பட்டியலை தயார் செய்து வைத்துள்ளார்கள் NCB அதிகாரிகள். கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போதை பொருள் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
விசாரணையில் இந்த போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டது உண்மைதான் என்று அவரே வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் அவருடைய சுமார் 8 வங்கி கணக்குகள் முடக்கியுள்ள போதை பொருள் தடுப்பு பிரிவினர். ஜாபர் சாதிக்கிடமிருந்து யார் யாருக்கெல்லாம் பண பரிவர்த்தனை நடந்துள்ளது என்கின்ற பட்டியலையும் தயார் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஜாபர் சாதிக்கை விசாரணை நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவின் இணை இயக்குனர், இதில் எந்த ஒரு அரசியல் கட்சியோ, எந்த ஒரு சினிமா பிரபலமும் தலையிட்டு இருந்தாலும் நாங்கள் நிச்சயம் விசாரணைக்கு அழைப்போம் என்றும், இதில் அரசியல் கட்சியை வைத்தோ மதத்தை வைத்தோ தப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஜாபர் சாதிக் வங்கி கணக்கில் இருந்து சினிமா பிரபலங்களுக்கு மிகப்பெரிய அளவில் பண பரிவர்த்தனை நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களுக்கெல்லாம் சமன் அனுப்பி விசாரணையை நடத்த உள்ளது போதை பொருள் தடுப்பு பிரிவினர் என்ற தகவல் வெளியாகி நிலையில் தமிழ் சினிமா துறையினர் பலரும் கடும் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஜாபர் சாதிக்கிடம் பணம் பெற்றவர்கள் நாங்கள் பணம் பெற்றது உண்மைதான், ஆனால் அவர் போதைப் பொருள் கடத்தல் செய்வது தெரியாது என்று சொன்னாலும் கூட, போதை பொருள் கடத்தல் செய்த பணத்தை யார் பெறுகிறார்களோ அதுவும் குற்றம் என்பதால், ஜாபர் சாதிக்கிடம் யாரெல்லாம் பணம் பெற்றார்களோ அவர்கள் இதில் தீவிர விசாரணைக்கு உட்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா துறையில் நீண்ட வருடமாக ஜாபர் சாதிக் நடிப்பில் இருக்கும் முக்கிய சினிமா பிரபலங்களின் வாங்கி கணக்குகளை NCB அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும், அந்த வகையில் எங்கள் படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், அவருடன் நாங்கள் பல தொழில்களில் பாட்னராக உள்ளோம், நீண்ட கால நண்பர், தூரத்து உறவினர், அவரிடம் பணம் பெற்றது உண்மை, ஆனால் ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியாது என யூ ட்யூப்ல் பேசுவது போல் பேசி NCB அதிகாரிகளின் விசாரணையில் தப்பிக்க முடியாது என கூறப்படுகிது.