தலைமறைவாக இருந்த மிக பெரிய இண்டெர்னஷனல் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு தீவிர வீசாரணை நடைபெற்று வருகிறது. உலக அளவில் நடந்து வரும் மிகப்பெரிய போதை பொருள் கடத்தல் மாஃபியா கும்பல் தலைவன் இந்தியாவில் இருந்து செயல்படுகிறார் என பல நாடுகள் இந்தியா உளவு பிரிவுக்கு துப்பு கொடுத்ததின் காரணமாக இந்தியாவின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மிகத் தீவிரமான வேட்டையில் இறங்கியது போதை பொருள் தடுப்பு பிரிவு.
தீவீர தேடுதல் வேட்டையில், டெல்லியில் தேங்காய் பவுடர் குடோனில் தேங்காய் பவுடர் உற்பத்தி செய்கிறோம் என போதை பொருளை கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.அங்கே இருந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் நடந்த விசாரணையில் இந்த கடத்தல் கூட்டத்தின் தலைவனாக செயல்படுவது திமுகவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஜாபர் சாதிக் என்றும் மற்றும் அவருடைய தம்பி சலீம் விடுதலை சிறுத்தை கட்சியில் உள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் போதைப் பொருள் கடத்தல் மாஃபியா கும்பலின் தலைவன் ஜாபர் சாதி திடீரென தலைமறைவானான், திமுகவின் முக்கிய பெருப்பில் இருந்த ஜாபர் சாதிக் நீக்கப்பட்டார், அவரை தொடர்ந்து அவருடைய தம்பியும் விசிக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் ஒரு மிக பெரிய போதை பொருள் கடத்தல் மாஃபியா கும்பல் தலைவனாக செயல்பட்ட ஜாபர் சாதிக், முதல்வர் உடன் இருந்த புகைப்படம், அமைச்சர்களுடன் இருந்த புகைப்படம், ஏன் உயர் காவல்துறை அதிகாரிகளுடன் இருந்த புகைப்படம் கூட வெளியாகி மிக பெரிய சர்ச்சையை உருவாக்கியது.
அதாவது மிக பெரிய போதை பொருள் கடத்தல் மாஃபியா கும்பலின் தலைவன் ஜாபர் சாதிக் நேரடியாக திமுகவில் முக்கிய பொறுப்பு வாக்கியத்தின் பின்னணியில் யார் யார் இருந்துள்ளது என்கிற விவாதம் தற்பொழுது எழுந்துள்ளது. மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பே ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தலில் சிக்கி, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக், பின்பு முன் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளான்.
இது தொடர்பாக கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் பாஸ் போர்ட் முடக்கப்ட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி ஒரு குற்ற பின்னணி கொண்ட ஒருவன், எப்படி திமுகவில் முக்கிய பொறுப்பை பெற்றான், முதல்வர், அமைச்சர் , காவல்த்துறை உயர் அதிகாரிகளிடம் புகைப்படம் எடுத்து கொண்டான் என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில், அந்த வகையில் தமிழக உளவு துறை சரியான தகவலை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்ல தவறிவிட்டதா என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்று திறனாளி ஒருவர் ஒரு டம்மி கோப்பையை கடையில் வாங்கி கொண்டு, மாற்று திறனாளி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து, இறுதி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி இந்த கோப்பையை வாங்கியதாக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்பு அவர் பெரிய டுபாக்கூர் என்றும், மாற்று திறனாளி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியிலே அவர் இடம் பெறவில்லை என்பதும் தெரியவந்தது. அந்த வகையில் ஒருவர் உண்மையிலே வெற்றி பெற்று கோப்பையை வாங்கி வந்தாரா.? அல்லது பண்டி பஜாரில் ஒரு கோப்பையை வாங்கி வந்து ஏமாற்றுகிறாரா என்கிற தகவலை முதல்வர் அந்த மாற்று திறனாளியை சந்திக்கும் முன்பு தமிழக உளவு துறை கண்டு பிடித்து இருக்க வேண்டும்.
இப்படி தொடர்ந்து முதல்வருடன் புகைப்படம் எடுத்து ஏமாற்றிய மாற்று திறனாளியை கூட கடந்து சென்று விடலாம், ஆனால் மிக பெரிய போதை பொருள் கடத்தல் மாஃபியா கும்பல் தலைவன் ஜாபர் சாதிக் குறித்த பின்னணி குறித்து தமிழக உளவு துறைக்கு தெரியாமல் இருந்தது எப்படி.? என்கிற மிக பெரிய கேள்வி எழுந்துள்ள நிலையில், அந்த வகையில் தமிழக உளவு துறை தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்…