அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் கட்டும் பணிக்காக உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் மட்டுமின்றி அணைத்து மதத்தினரிடமும் நிதி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் நூறு வார்டுகளிலும் ராமர் கோயிலுக்கு நிதி வசூலிக்க பிப். 27 வரை ராமன், சீதாதேவி, ஆஞ்நேயர் விக்ரகங்களுடன் ரத யாத்திரை நடத்தி நிதி வசூல் செய்ய ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு அனுமதி கேட்டு மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் மனு அளித்திருந்த நிலையில், ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்து திலகர் திடல் காவல் உதவி ஆணையர் உத்தரவிட்டார், கரோனா நோய் பரவலால் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டும் ரத யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் சார்பில் உயர் நீதிமன்றக் கிளையில் ரத யாத்திரைக்கு அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது, அதில் நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது. மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இதனால் கரோனா ஊரடங்கை காரணம் காட்டி ரத யாத்திரைக்கு அனுமதி மறுப்பது சட்டவிரோதம். எனவே ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்து திலகர் திடல் துணை ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, ரத யாத்திரைக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதி, மதுரையில் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மதுரை மாவட்ட ரத யாத்திரைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து ராம ஜென்ம பூமி தீர்த்த சேஷத்திரம் ராமர் கோவில் கட்டுமான பணி தொடர்பாக நிதி சேகரிப்பு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ரதயாத்திரை நாளைபிப்ரவரி 20 முதல் மதுரையில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை மதுரையில் ராமர் ரதம் சென்று மக்களிடம் நிதி பெற இருக்கிறது. இதுவரை ஆயிரத்து 1611 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது ராம ஜென்மபூமி கட்டுமான நிதியாக மொத்த இலக்கு 3,500 கோடி தமிழ்நாட்டின் இலக்கு 100 கோடி இதுவரை 32 கோடி வசூலாகியுள்ளது குறிப்பிட தக்கது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .