சென்னை : மனதைரியம் இருப்பவர்களே தற்கொலை செய்துகொள்வார்கள். அந்த தைரியத்தை வாழ்க்கையில் போராட பயன்படுத்தலாமே என தவறான கருத்தை சமூகத்தில் விதைத்து மறைமுகமாக தற்கொலைக்கு தூண்டுகிறார்கள் என சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் தற்கொலை என்றுமே பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டியது நமது கடமை.
தன்னுடைய செழிப்பான ரூபாய் 5000த்தைதனது அம்மாவிடம் கொடுத்துவிடுங்கள் என கூறிவிட்டு சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. சென்னை தரமணியில் அமைந்துள்ள அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு பயின்றுவருபவர் சல்மான்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இவர் தரமணி பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். கடந்தசில நாட்களுக்கு முன்னர் திருநெல்வேலி சென்ற சல்மான் திரும்பிவந்த நிலையில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அதே தனியார் விடுதியில் வசிக்கும் கல்லூரி நண்பர்கள் அறைக்கு வந்துள்ளனர்.
அங்கு சல்மான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் விரைந்துவந்து சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசுமருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். சல்மானின் அறையை சோதனையிட்டபோது கடிதம் ஒன்று கிடைத்தது.
அதில் மரணத்திற்குப்பிறகு என்ன நடக்கும் என தெரிந்துகொள்ளவே தற்கொலை செய்கிறேன். எனது சேமிப்பான ரூபாய் அய்யாயிரத்தை எனது அம்மாவிடம் கொடுத்துவிடவும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதம் அனைவர் நெஞ்சையும் உருக்குவதாய் அமைந்துள்ளது.