திருப்பூர் : காதல் கண்ணை மறைக்கும் என பொதுவாக கூறுவதுண்டு. ஆனால் இங்கு கள்ளக்காதல் கண்ணை மறைத்து இரண்டு குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்பதை கண்டு நமக்கு பரிதாபமே மிஞ்சுகிறது. கலாச்சாரத்தை சீர்கெடுக்கும் சீரியல்கள் திரைப்படங்களை தடை செய்தால் மட்டுமே இதுபோன்ற விபரீதங்களை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் தற்கொலை கொலை என நாளுக்குநாள் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதாக பலர் விமர்சித்து வரும்வேளையில் கள்ளக்காதல் ஜோடி ஒன்றின் தற்கொலை மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியை அடுத்துள்ள எருக்கலம் பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன்.
இவர் மனைவி மற்றும் மகளுடன் வசித்துவந்தார். மகளுக்கு திருமணமான நிலையில் தனது மனைவியுடன் சமீபத்தில் தான் இந்த பகுதிக்கு குடியேறியதாக சொல்லபப்டுகிறது. இதனிடையே அதே பகுதியில் வசிக்கும் நடராஜன் மற்றும் மாரியம்மாள் ஆகியோருடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் எதிர்ப்பரவிதமாக நடராஜன் இறந்துவிட்டார்.
அதையடுத்து மரியம்மாளுடன் மணிகண்டனுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. மரியம்மாளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் மாரியம்மாளுக்கு அடிக்கடி ஆறுதல்சொன்ன மணிகண்டன் ஒரேடியாக இழுத்து அரவணைத்ததில் இருவருக்கும் கள்ளக்காதல் தீ பற்றியுள்ளது. அதையடுத்து தனிமையில் இருவரும் இன்பம் கண்டுள்ளனர்.
உறவினர்களுக்கு விஷயம் தெரிந்து கண்டித்ததும் இந்த ஜோடி தலைமறைவானது. மாயமான அவர்களை தேடுகையில் பொம்மநாயக்கன்பட்டி காற்றாலை பகுதியில் இருவரும் மதுவில் விஷம் கலந்து சாப்பிட்டு இறந்தது தெரியவந்தது. சடலங்களை மீட்ட போலீசார் போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்பினர் மேலும் காதலை பிரித்துவிடுவார்கள் என பயந்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.