பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உடன் கை கோர்த்த எடப்பாடி.. அமித்ஷாவுக்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் என்ன.?

0
Follow on Google News

அதிமுகவில் ஓபிஎஸ் அணி மற்றும் இபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக பிரிந்து இருப்பதை பாஜக டெல்லி தலைமை விரும்பவில்லை. பொதுவாக ஒருங்கிணைந்த அதிமுகவை தான் பாஜக விரும்புகிறது. அந்த வகையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் பிரிந்த பின்பு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு முக்கிய பிரமுகர் மூலம் அமித்ஷாவை சந்திக்கும் வாய்ப்பை பெற்று டெல்லியில் சந்தித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழக அரசியல் குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது, அதற்கு ஒருங்கிணைந்த அதிமுகவை தான் பாஜக விரும்புகிறது, பிரிந்த நீங்கள் மீண்டும் ஒன்றாக இணைவதற்கான வேலையை செய்யுங்கள் என்று அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்து அனுப்பி வைத்துள்ளார். மீண்டும் பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை, அதிமுக ஒற்றை தலைமையாக தன்னுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என் என்பதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் பாஜக ஓபிஎஸ்க்கு ஆதரவாக சில முடிவுகளை எடுத்து வருவதாக உணர்ந்த எடப்பாடி பழனிச்சாமி, காங்கிரசுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளார் எடப்பாடி. அதே போன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய பெண் தலைவர் ஒருவர் தொடர்ந்து திமுக முக்கிய அமைச்சருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அந்த அமைச்சருக்கும் அந்த காங்கிரஸ் பெண் அரசியல் தலைவருக்குமான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

இதனால் அந்த காங்கிரஸ் பெண் தலைவருக்கு மீண்டும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சீட்டு ஒதுக்ககூடாது என்றும், மேலும் அந்த தொகுதியில் திமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்பதில் பெண் காங்கிரஸ் தலைவருக்கு எதிராக திமுக அமைச்சர் உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில் இம்முறை திமுக உடன் கூட்டணி அமைத்தால் தமக்கு சீட்டு கிடைக்காது என்பதால் மீண்டும் போட்டியிட வேண்டும் என்றால் எடப்பாடியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது தான் சாரி என்கிற முடிவுக்கு வந்துள்ளார் அந்த பெண் காங்கிரஸ் தலைவர்.

எடப்பாடியுடன் திரை மறைவில் காங்கிரஸ் கட்சிக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த அந்த பெண் காங்கிரஸ் தலைவர். டெல்லி காங்கிரஸ் தலைமையிடமும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த சட்டமன்றத் தேர்தல் போன்று தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த தொகுதியை திமுக ஒதுக்காது, அதனால் முன்னெச்சரிக்கையாக நம்முடன் கைகோர்க்க தயாராக இருக்கும் எடப்பாடி உடன் தொடர்பு வைத்துக் கொள்வோம் என்று அந்த பெண் தலைவர் டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு தெரிவித்துள்ளார்.

திரை மறைவில் காங்கிஸ் உடன் எடப்பாடி பழனிச்சாமி கைகோர்த்து விவகாரம் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி இருவருக்கும் உளவுத்துறை மூலமாக ரிப்போர்ட் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை மதுரை விமான நிலையத்தில் சில நிமிடம் சந்தித்து பேச எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்தும் அதற்கான வாய்ப்பை பிரதமர் மோடி தரப்பில் ஏற்படுத்தி தரவில்லை.

அதே போன்று சமீபத்தில் தமிழகம் வந்த அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி நேரம் கேட்டும் அதற்கு அமித்ஷா தரப்பிலிருந்து நேரம் ஒதுக்கவில்லை, இதற்கு முக்கிய காரணம் திரை மறைவில் எடப்பாடி பழனிச்சாமி காங்கிரஸ் உடன் கைகோர்த்துள்ளது தான் என்று கூறப்படுகிறது. மேலும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தமிழகம் வருகைக்குப் பின்பு அதிமுக ஐடி பிரிவினர் பாஜகவுக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்து வருவது பின்னனியில் எடப்பாடி இருப்பதாக கூறப்படுகிறது.