புதுக்கோட்டை : கள்ளக்காதலால் தான் சீரழிந்தது போதாதென்று தனது மகளையும் சீரழித்த தாய்க்கு மகிளா நீதிமன்றம் சரியான தண்டனை வழங்கியிருப்பதாக புதுக்கோட்டை மக்கள் பரவலாக பேசிவருகின்றனர். தனது கள்ளகாதலனுக்கு பெற்ற மகளையே பலிகொடுத்த அந்த தாய்க்கு கிடைத்த தண்டனை போதாதென ஒரு பிரிவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நரியன்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் கலா. நரியன்கொல்லை கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கும் கலாவுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு அழகான பெண்குழந்தையும் பிறந்தது.
இரண்டே வருடங்களில் காதல் கசந்துபோக கணவரைவிட்டு தனியாக மகளுடன் வசித்து வந்துள்ளார் கலா. கடந்த 2019 ல் கலா புதுக்கோட்டை கணேஷ் நகருக்கு குடிபெயர்ந்துள்ளார். மகள் எட்டாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில்தான் சேங்கைத்தோப்பு பகுதியில் உள்ள கணேசன் என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. கணேசன் அடிக்கடி கலாவின் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்துவந்துள்ளார்.
இந்நிலையில்தான் 2020 ம் ஆண்டு ஒரு நாள் இரவு முழுவதும் கலா வீட்டில் தங்கிய நிலையில் கலாவின் மகள் மறுநாள் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கணேசன் மயக்கமருந்து கொடுத்து கலாவின் மகளை பாலியல்பலாத்காரம் செய்துள்ளார். இதற்க்கு கலாவும் உடந்தையாக இருந்துள்ளார்.
இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானதாக கூறப்படுகிறது. சிறுமியை பலாத்காரம் செய்த கணேசனுக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை மற்றும் 20 வருட கடுங்காவல் தண்டனை மற்றும் மூன்றுலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. உடந்தையாக இருந்தாகலாவிற்கு சாகும்வரை ஆயுள்தண்டனையும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் இரண்டுலட்ச ரூபாய் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.