அமைச்சர் மூர்த்தியை காலி செய்ய TTVஉடன் கை கோர்த்த திமுகவினர்… அவசரப்பட்டு வார்த்தையை விட்ட மூர்த்தி… தேனியில் மாஸ் காட்டும் TTV…

0
Follow on Google News

நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு சாதகமாக உள்ள 15 தொகுதிகளை குறி வைத்து களம் இறங்கியுள்ள பாஜக, அதில் சுமார் பத்து தொகுதிகளில் உறுதியான வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றனர்.

இந்நிலையில் அனைவராலும் கவனிக்கப்பட்டு வரும் தேனி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில இடம் பெற்றுள்ள அமமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார், திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக சார்பில் நாராயணன் சாமி ஆகியோர் போட்டியிடுகிறார்கள், இந்த தொகுதியில் அதிமுக அட்ரஸ் இல்லாமல், இருக்கிற இடம் தெரியாமல் காணாமல் போய் உள்ள நிலையில், டிடிவி தினகரனுக்கும் தங்க தமிழ்செல்வனுக்கும் இடையிலான போட்டியாக தான் இதுவரை பார்க்க பட்டு வந்தது,

தற்பொழுது களநிலவரப்படி இருவருக்கும் இடையிலான போட்டியில் டிடிவி தினகரன் மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கருத்து கணிப்புகள் உறுதி செய்துள்ளது. டிடிவி தினகரன் வெற்றிக்கு பல காரணங்கள் உள்ளது, அதில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றாலும் தேனி பாராளுமன்ற தொகுதியில் மட்டும் திமுகவை மண்ண கவ்வ வைத்தனர் தேனி பாராளுமன்ற தொகுதி மக்கள்.

அந்த அளவுக்கு தேனி பாராளுமன்ற தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற ரவீந்திரநாத் தந்தை ஓ பன்னீர்செல்வதிற்கு மிகப்பெரிய செல்வாக்கு தேனியில் இருக்கிறது. தற்போது ஓபிஎஸ் ஆதரவு மற்றும் பாஜக கூட்டணி என டிடிவி தினகரனுக்கு இருந்து வருவதால் டிடிவி தினகரனுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்பட்டு வருகிறது. இதையெல்லாம் கடந்து TTV சம்பதியான வாண்டையார் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும், தேனி பாராளுமன்ற தொகுதியில் தன்னுடைய மொத்த ஆதரவாளர்களையும் உள்ளே இறக்கி சம்மந்தி டிடிவி தினகரன் வெற்றிக்காக மிகத் தீவிரமாக தேர்தல் பணியை செய்து வருகிறார்.

மேலும் டிடிவி தினகரன் மற்றும் அவரது மனைவி மற்றும் சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை என யார் TTV க்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு சென்றாலும் தேனி மக்கள் மிக உற்சாகத்துடன் வரவேற்பு அளித்து வருகிறார்கள். அதே நேரத்தில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் செல்லும் இடம் எல்லாம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், பல இடங்களில் பிரச்சாரம் செய்ய கூட செல்ல முடியாத சூழல் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதியில் திமுக வெற்றி பெறவில்லை என்றால் தான் அமைச்சர் பதவி மற்றும் மாவட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்வேன் என அமைச்சர் மூர்த்தி சபதம் செய்துள்ள நிலையில், அமைச்சர் மூர்த்திக்கு எதிரான திமுகவினர், இது தான் சரியான நேரம், தங்கதமிழ்செல்வன் தோல்வியை தழுவினால், அமைச்சர் மூர்த்தி அமைச்சர் பதவி மற்றும் மாவட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிடுவார், அவருடைய அரசியலை காலி செய்ய நமக்கு கிடைத்த வாய்ப்பு இது என TTVக்கு ஆதரவாகவும், திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனுக்கு எதிராகவும் உள்ளடி வேலைய திமுகவில் இருக்கும் அமைச்சர் மூர்த்தி எதிர்ப்பு கோஷ்டி செய்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அவசரப்பட்டு அமைச்சர் மூர்த்தி பதவியை ராஜினாமா செய்வேன் என வார்த்தையை விட்டுவிட்டார், மேலும் தேனி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தனக்கு தான் தேனி தொகுதி கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் புதியதாக கட்சியில் சேர்ந்த தங்கத்தமிழ்செல்வனுக்கு சீட் கொடுத்ததில், ராமகிருஷ்ணன் ஆதரவாளர்கள் தங்கதமிழ் செல்வனுக்கு எதிராக உள்ளடி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தங்க தமிழ்செல்வன் மற்றும் ராமகிருஷ்னன் இடையில் கோஷ்டி பூசல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் TTV தினகரன் மிக பெரிய வாக்கு வித்தியசத்தில் வெற்றி பெறுவார் என்கிறது தேனி கள நிலவரம்.