தற்கொலை செய்வதற்கு முன்பு டிஐஜி விஜயகுமாரின் கடைசி நிமிடங்கள்..

0
Follow on Google News

கோவை மேற்கு மண்டல டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் டிஐஜி விஜயகுமார் காவல் துறையில் திறமையான அதிகாரி என பெயர் பெற்ற, இவரது மனைவி பல் மருத்துவம் படித்தவர். இவர்களின் ஒரே மகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் அவரை எந்த மருத்துவ கல்லூரியில் சேர்ப்பது குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை கேட்டு வந்துள்ளார் டிஐஜி விஜயகுமார்.

சத்தமாக கூட பேசாத டிஐஜி விஜய்குமார் காவல்துறையில் நேர்மையான அதிகாரியை, தன்னுடன் பணியாற்றும் சக காவல் துறையை சேர்ந்தவர்களிடம் நேசமாக பழகி வந்த டிஐஜி விஜய்குமார் தற்கொலை செய்து கொண்டது ஒட்டு மொத்த காவல்துறையை சேர்ந்தவர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் டிஐஜி விஜய்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக FIR அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், இரவில் சரியான தூக்கம் வரவில்லை என்பதால் நீண்ட நாட்களாக டிஐஜி விஜயகுமார் தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக டிஐஜியின் பாதுகாவலர் ரவிச்சந்திரனின் தெரிவித்த வாக்குமூலமும் அந்த முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

அதில், டிஐஜி விஜயகுமார் கோவை சரகத்திற்கு ஜனவரி மாதம் வந்ததிலிருந்து சரியான தூக்கம் வரவில்லை என மாத்திரை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். டிஐஜி விஜயகுமார் பாதுகாவலர் ரவிச்சந்திரன் முகாம் அலுவலகத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையிலேயே தங்கி வைத்துள்ளார். வழக்கம்போல் எப்போதும் டிஐஜி விஜயகுமார் காலை 07.00 மணிக்கு DSR பார்ப்பதற்காக கீழே உள்ள DSR ROOMக்கு வருவது வழக்கம்.

ஆனால் சம்பவம் நடந்த அன்று, காலை 06.30 மணிக்கெல்லாம் டிஐஜி விஜயகுமார் வந்தவர், முகாம் அலுவலகத்தில் அலுவலில் இருந்த காவலர் ரவிவர்மாவிடம் குடிப்பதற்கு பால் கேட்டுளளார், உடனே காவலர் ரவிவர்மான் பால் காய்ச்சிக்கொடுத்துள்ளார். பின்பு காலை 06.40 மணியளவில் பாலை குடித்துவிட்டு பாதுகாவலர் ரவிச்சந்திரன் தங்கியிருந்த அறைக்கு டிஐஜி விஜயகுமார் சென்றுள்ளார்.

அங்கே DSR கேட்ட டிஐஜி விஜயகுமாரிடம் அவரின் பாதுகாவலர் ரவிச்சந்திரன் DSR எடுத்துக் கொடுத்துள்ளார். அதன் பின்பு பாதுகாவலர் ரவிச்சந்திரன் தங்கியிருந்த அறையில் அவர் எப்போதும் போல் துப்பாக்கி வைத்திருக்கும் இடத்திற்கு சென்று அங்கிருந்த துப்பாக்கியை டிஐஜி விஜயகுமார் எடுத்துள்ளார். இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பாதுகாவலர் ரவிச்சந்திரனிடம் பேசிக்கொண்டே அறையை விட்டு வெளியே சென்றுள்ளார் டிஐஜி விஜயகுமார்.

பாதுகாவலர் ரவிச்சந்திரன் T-SHIRT போட்டுட்டு வெளியே வருவதற்குள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு பாதுகாவலர் ரவிச்சந்திரன் உடன் அவரது அறையில் இருந்த CAMP OFFICE டிரைவர் அன்பழகனும் வெளியே ஓடி வந்து பார்த்துள்ளார்கள், . அப்போது டிஐஜி மல்லாந்த நிலையில் தலையில் இரத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்துள்ளார், . துப்பாக்கி அங்கேயே கிடைத்துள்ளது.

இதனையடுத்து, கோவை அரசு மருத்துவமனைக்கு சுமார் 7 மணியளவில் சென்ற போது டிஐஜி விஜயகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே உயர் அதிகாரிக்களுக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்த டிஐஜி விஜயகுமார்.பாதுகாவலர் ரவிச்சந்திரன், என்ன காரணத்திற்காக டிஐஜி சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை என பாதுகாவலர் ரவிச்சந்திரன் அங்கு நடந்த சம்பவத்தை வாக்குமூலமாக தெரிவித்துள்ளது முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.