குட்கா வியாபாரியாக உத்திரபிரதேசம் செய்து கொள்ளையர்களை வேட்டையாடிய டிஐஜி விஜயகுமார்…

0
Follow on Google News

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, கும்முடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சன் வீட்டில் புகுந்த வட மாநில கொள்ளையர்கள், அவர் வீட்டில் இருந்தவர்களை கடுமையாக தாக்கி விட்டு, தமேலும் எம்எல்ஏ சுதர்சனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு, அவர் வீட்டில் இருந்த ஏராளமான நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பித்து சென்றது வடமாநில கொள்ளை கூட்டம்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சுட்டு பிடிக்க உத்தரவிட்ட ஜெயலலிதா, இதற்காக ஐஜி ஜாக்கிட் தலைமையில் ஒரு தனி படை அமைத்து உத்தரவிட்டார் ஜெயலலிதா. இந்த தனிப்படையில் தமிழ்நாட்டில் இருந்து துணிச்சல் மிக்க நான்கு டிஎஸ்பிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதில் ஒருவர் தான் தற்போது தற்கொலை செய்து கொண்ட டி ஐ ஜி விஜயகுமார்

நான்கு டிஎஸ்பிகளும் நான்கு குழுவாக ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி ஹரியானா என வட மாநிலக்களில் தங்கி தேடுதல் வேட்டையை தொடர்கிறார்கள். அந்த குழுவில் இடம்பெற்று இருந்து அப்போது டிஎஸ்பியாக இருந்த விஜயகுமார் கொள்ளை கூட்ட தலைவன் ஓமாவை தேடும் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார், அவனின் தொலைபேசி லொகேஷன் மூலம் எங்கே நடமாடுகிறார் என்பதை கண்டு பிடித்து விடுகிறார் விஜயகுமார்.

பாகிஸ்தான் எல்லை ஓரத்தில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில், மாந்தர் என்னும் மாவட்டத்தில் கொள்ளை கூட்ட தலைவன் இருப்பதை அறிந்த விஜயகுமார் தன்னுடைய உயர் அதிகாரி, ஜாங்கிட்க்கு தகவல் கொடுக்கிறார், உடனே டெல்லியில் உள்ள சிறப்பு காவல் துறையினர் மற்றும், பஞ்சாப்பில் உள்ள புலனாய்வு பிரிவுக்கு, கொள்ளை கூட்ட தலைவன் ஓமா இருக்கும் இடத்தை தெரிவித்த, ஐஜி ஜாங்கிட், மற்றும் விஜயகுமார், தொடர்ந்து நீங்கள் கண்காணித்து எங்களுக்கு தகவல் தாருங்கள் என தெரிவிக்கிறார்கள்.

ஆனால் டெல்லி போலீஸ், ஓமாவை பிடித்து தமிழ்நாடு போலீஸ் பெயர் வாங்குவதா.? நாம் அவனை பிடித்து, அந்த பெருமையை நாம் பெற்று கொள்வோம் என ஓமா இருக்கும் பஞ்சாப் மாநிலம் மாந்தர் மாவட்டத்திற்கு செல்கிறது டெல்லி போலீஸ், தகவல் அறிந்து அங்கிருந்து தப்பித்து விடுகிறான் ஓமா, மேலும் தன்னுடைய தொலைபேசி மூலம் தமிழ்நாடு போலீஸ் கண்காணிப்பதை தெரிந்து கொண்டு தொலைபேசியை தூக்கி எரிந்து விடுகிறான் ஓமா.

இதன் பின்பு சுமார் 15 நாட்கள் ஓமா எங்கே இருக்கிறான் என்கின்ற எந்த ஒரு தகவலும் இல்லாமல் திணறிக் கொண்டிருக்கிறார் விஜயகுமார். இருந்தாலும் தொடர்ந்து தீவிர வேட்டையில் ஈடுபட்ட விஜயகுமார், கொள்ளை கூட்ட தலைவன் ஓமா உத்திரபிரதேசத்தில் ஒரு பகுதியில் இருப்பதாக தகவல் கிடைக்கிறது. உடனே அப்போது டி எஸ் பி யாக விஜயகுமார் மற்றும் இரண்டு சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர் குட்கா வியாபாரியாக ஓமா நடமாடும் கிராம பகுதிகளில் சுற்றி வருகிறார்கள்.

தொடர்ந்து யாருக்கும் சந்தேகம் வராதபடி குட்கா வியாபாரியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த விஜயகுமார், பின்பு ஓமா இருக்கும் இடத்தை கண்டு பிடிக்கிறார், அதன் பின்பு முறையாக உயர் அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சுற்றி வளைத்து ஓமா கைது செய்யப்படுகிறார். இந்த ஆபரேஷன்காக சுமார் ஒரு வருடம் வட மாநிலக்களில் தங்கி தேடுதல் வேட்டை நடத்திய அப்போது டி எஸ் பியாக இருந்த மறைந்த டி ஐ ஜி விஜயகுமார்.

கடைசி ஆறு மாதம் எந்த ஒரு விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதினால் தான் மிக பெரிய கொள்ளையனை பிடிக்க முடித்தது என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தழுவி தான் கார்த்திக் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஓன்று படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.