டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு தூண்டியது என்ன.? அது என்ன ஓசிடி நோய் தெரியுமா.?

0
Follow on Google News

தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார் கடந்த சில நாட்களாகவே உளவியல் ரீதியாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், அதற்காக சில மருந்துகளை எடுத்துக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் இது போன்று கடுமையான மன உளைச்சலில் ஆளாகுகின்றவர்களுக்கு நரம்பியல் சம்பந்தமான உளவியல் ரீதியாக ஓசிடி என்கின்ற நோய் ஏற்பட்டு கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாக்குவார்கள் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

ஓசிடி நோய் என்பது இரண்டு வகைபடுகிறது என விளக்கும் உளவியல் நிபுணர்கள். அதில் ஒன்று நாம் வீட்டிலோ, அலுவலகத்திலையோ ஒரு பொருள் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்து அந்த இடத்தில், அந்த பொருளை வைத்து விட்டு, பின்பு அந்த பொருளை வேறு ஒரு இடத்தில் மாற்றி வைத்தால் கடமையான கோபம் வரும், மேலும் அப்படி சரியான இடத்தில் அந்ததந்த பொருள்கள் உள்ளதா என்று அடிக்கடி சரி செய்து கொள்வார்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

மற்றொரு வகையான ஓசிடி நோய் என்பது, எந்த ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் கூட, அதை எளிதாக எடுத்து கொள்ளாமல், பெரிய விஷயமாக எடுத்து கொண்டு, அந்த விஷயத்தை மனதிற்குள் போட்டு இரண்டு அல்லது மூன்று நாட்கள், அதை பற்றியே நினைத்து கடும் மன உளைச்சலுக்கு உள்ளாவது, யாராவது ஏதாவது சொன்னால், அவரை நான் எப்படி மதித்தேன், என்னை இப்படி சொல்லிவிட்டாரே என மன உளைச்சலுக்கு உள்ளாவது.

இப்படி கடந்து போக வேண்டிய விசயங்களை மனதிற்குள் போட்டு குழப்பிக் கொண்டிருக்கும் ஒரு வகையான மன உளைச்சலை தனக்கு தானே ஏற்படுத்திக் கொள்ளும் நோய் தான் ஓசிடி நோய். இந்நிலையில் மன உறுதி இல்லாதவர்களால் மட்டுமே மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்ய நேரிடும் எனபது தவறான கருத்து. உயர்ந்த இடத்தில் வலிமையாக இருந்தாலும் கூட, அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சூழ்நிலை அவர்களின் மனநிலையை மாற்றும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

அந்த வகையில் ஓசிடி நோய் என்பது ஓசிடி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிந்தால், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் அடிக்கடி அவர்களிடம் பேசி அவர்கள் பிரச்சனையை சரி செய்து மன உளைச்சலில் இருந்து அவர்களை வெளி கொண்டு வரவேண்டும். அந்த வகையில் அந்த வகையில் தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமாரிடம் அவரின் உயர் அதிகாரிகள் பலமுறை அவரிடம் பேசி கவுன்சலிங் செய்ததாக கூறப்படுகிறது.

இருந்தாலும் ஓசிடி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மனது தனக்கு அளிக்கப்படும் கவுன்சலிங்கை ஏற்று எப்படி ஏற்று கொள்கிறது என்பது அவர்களின் மன நிலையை பொறுத்து தான் இருக்கும். தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார் முதல் நாள், நன்றாக பேசினார், காலையில் வழக்கம் போல் செய்யும் உடற்பயிற்சியை செய்தார், தீடிரென எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்கிற குழப்பம் நீடித்து வரும் நிலையில்,

ஓசிடி நோயால் பாதிக்கப்படுகின்றவர்களின் மனநிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்றும் அதனால் தற்கொலை செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கூட அவருடைய மனநிலை தற்கொலைக்கு மாறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது., மேலும் ஓசிடி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அணைத்து வேலையையும், தானே பார்க்க வேண்டும் மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்க கூடாது என்கிற மனநிலையில் இருக்க கூடியவர்கள், ஒரு கட்டத்தில் நாம் ஏன் மற்றவர்களுக்கு சுமையாக இருக்க வேண்டும் என்கிற மனநிலை வரும் போது அவர்கள் தற்கொலை செய்யும் முடிவை எடுக்கலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.