சென்னை : தமிழகத்தில் கொலைகள் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகையில் மறுபுறம் தற்கொலை கூட்டுப்பாலியல் சம்பவங்களும் ஒருசேர அதிகரித்து வருவது தமிழக மக்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியள்ளது. நேற்று முன்தினம் தான் சென்னையில் இரட்டைக்கொலை நடந்து பீதியை கிளப்பியிருந்தது. இந்நிலையில் மீண்டும் அதேபோல நடைபெற்ற சம்பவம் மேலும் சென்னை மக்களை பீதிக்குள்ளாக்கியிருக்கிறது.
சென்னை பல்லாவரம் பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். வயது 41. இவரது மனைவி காயத்ரி (39). இந்த தம்பதியினருக்கு ஹரிகிருஷ்ணன் (8) என்ற மகனும் நித்யஸ்ரீ (13) என்ற மகளும் உள்ளனர். பிரகாஷ் ஐடி ஊழியராக பணிபுரிந்துவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தம்பதிகள் குடும்பத்தினருடன் இறந்துகிடந்தது அனைவரயும் திகைக்க வைத்துள்ளது.
நேற்று முன்தினம் பிரகாஷ் தம்பதியினருக்கு திருமண நாள் என்பதால் குடும்பத்தினருடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். அன்று காயத்ரியின் தந்தை திருப்பதிக்கு சென்றுவிட்டு திரும்பவந்துள்ளார். வீட்டின் காலிங் பெல்லா அழுத்தியும் யாரும் பதில்கொடுக்கவில்லை. அதனால் கதவை ஓங்கி தட்டியுள்ளார். அப்போதும் பதில் இல்லாததால் அச்சமடைந்த தந்தை ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.
அவர் அங்கெ கண்ட காட்சி அவரை பயங்கரமாக திகைக்க வைத்துள்ளது. பேரன் பேத்தி மகள் என அனைவரும் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர். இதனால் மிகவும் பதறிப்போன அவர் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் வந்து கதவை திறந்தனர். அங்கு ஒரு குடும்பமே ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளது.
அந்த அறையில் ஒருபுறமாக மின்சார ரம்பம் ஓடியநிலையில் இருந்துள்ளது. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்துவந்து சடலங்களை கைப்பற்றினர். பிரேதபரிசோதனைக்கு உடல்களை அனுப்பிவைத்த போலீசார் பக்கத்துவீடுகளில் விசாரணையை தொடங்கினர். அப்போது அருகிலிருந்தவர்கள் கூறுகையில்,
அவர்கள் வீட்டில் ஏதோ சுத்தம் செய்கிறார்கள் என நினைத்தோம். ஆனால் இப்படிசெய்வார்கள் என எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளனர். மேலும் இந்த மின்சார ரம்பத்தை அமேசான் மூலம் கடந்தவாரம் பிரகாஷ் வாங்கியுள்ளார். மேலும் வீட்டிலிருந்து 3.5 லட்சம் மதிப்பிலான கடன்பத்திரத்தையும் போலீசார் மீட்டுள்ளனர். வீட்டில் கிடைத்த கடிதத்தில் குடும்பத்தோடு இந்த முடிவு எடுக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீசார் இது தற்கொலையா கொலையா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பிரகாஷ் செய்தது தற்கொலை. மற்றவர்களை செய்தது கொலை என பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.