தஞ்சாவூர் : அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பாலியல் புகாரில் அடிக்கடி சிக்குவதுண்டு. நாம் தமிழர் சீமான் ஒரு பாலியல் குற்றவாளி என கரூர் எம்பியான ஜோதிமணி கூறியிருந்தார். மேலும் அரசியல் கட்சி நிர்வாகிகளில் சிலர் இந்த விவகாரங்களுக்காக கொல்லப்பட்ட சம்பவமும் நடந்தேறியுள்ளது. காங்கிரஸ் கூட இதே புகாருக்கு ஆளாகியுள்ளது.
வேளச்சேரி காங்கிரஸ் எம்.ஏல்.ஏ மீது உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் தன்னை கற்பழித்துவிட்டார் எனவும் திருமணம் செய்துகொள்வதாக மிரட்டி பலமுறை பலவந்தப்படுத்தியதாகவும் வழக்கு தொடர்ந்ததோடு மட்டுமல்லாமல் கமிஷனர் அலுவலகத்தில் புகாரும் அளித்திருந்தார். அந்த வழக்கின் நிலை தற்போது என்னவாயிற்று என்பதை பற்றிய ஒரு தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் லோகநாதன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுபா என்பவரை மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவியாக நியமித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே முன்னாள் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவியாக இருந்த பட்டீஸ்வரம் மீனாக்ஷி , லோகநாதனின் லீலைகள் குறித்து பேசியதாக ஒரு ஆடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகிவருகிறது.
தஞ்சை மாவட்ட மகிளா காங்கிரசில் இருக்கும் பலபெண் நிர்வாகிகளுக்கு லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுத்தார் என அந்த ஆடியோவில் பட்டேஸ்வரம் மீனாக்ஷி பேசியுள்ளார். மேலும் லோகநாதனுக்கு ஆதரவாக கும்பகோணம் மேயர் சரவணன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளான மிர்ஸாவுதீன், செந்திநாதன் மற்றும் சசிகுமார் ஆகியோர் மீனாக்ஷியின் வீட்டிற்கு வந்து கொலைமிரட்டல் விடுத்ததாக பட்டேஸ்வரம் காவல்நிலையத்தில் மீனாக்ஷி புகாரளித்துள்ளார்.
இந்த சம்பவம் தஞ்சை கும்பகோணம் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசார் மீது சுமதப்பபியும் பாலியல் குற்றம் இது ஒன்றும் முதல்முறையல்ல என்றும் காங்கிரசின் பரம்பரியமே அப்படித்தான் எனவும் அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் எதற்கெடுத்தாலும் குரல் கொடுக்கும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இது குறித்து வாய் திறக்காமல் எங்கே இருக்கிறார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.